
பணியாரம் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.முளை விட்ட பாசிப் பயறு - 2 கப்
2.கடலை மாவு (Besan) - 1 கப்
3.பசலைக் கீரை இலை - 1கப்
4.தண்ணீர் - 2 கப்
5.இஞ்சி துண்டுகள் - 1 டீஸ்பூன்
6.சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
7.சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
8.பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
9.உப்பு தேவையான அளவு
10.எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் பசலைக் கீரை இலைகளைப் போட்டு, 5 நிமிடம் ப்லான்ச் (Blanch) பண்ணவும்.
ப்லான்ச் பண்ணின இலைகளை ஐஸ் வாட்டரில் முக்கி எடுத்து மிக்ஸியில் போடவும். அதனுடன் முளைவிட்ட மூங் டால் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து மசிய அரைத்தெடுக்கவும். உப்பு, சிவப்பு மிளகாய் தூள், சீரகத் தூள், கடலை மாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை அரைத்தெடுத்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதே நேரம் குழிப்பணியாராக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடான குழிகளில் சுத்தமான காட்டன் துணியில் எண்ணெயை நனைத்து தடவவும்.
பின் கரைத்த மாவிலிருந்து ஒரு ஒரு டேபிள் ஸ்பூனாக மாவை எடுத்து குழியின் முக்கால் பாகம் நிறையும் அளவு ஊற்றவும். ஸ்பூனில் எண்ணெய் எடுத்து மாவின் ஓரங்களில் ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். பின் திருப்பிப் போட்டு மறு பக்கம் வேகவிடவும். ஒரே சீராக வெந்த பின், எடுத்து தேங்காய் சட்னி அல்லது கொத்த மல்லி சட்னி தொட்டு உண்ணவும். சுவையான, ப்ரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஆரோக்கியமான டிபன்.
தோரை (Torai) சாலட் ரெசிபி
பீர்க்கங்காயை (Torai) தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், பீர்க்கங்காய் துண்டுகளைப்போட்டு, தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும். ஒரு பௌலிலுள்ள குளிரூட்டப்பட்ட யோகர்ட்டுடன் அதை சேர்க்கவும். அதனுடன் பீர்க்கங்காய் அளவுக்கு வெள்ளரிக்காய் துருவல் சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் உப்பு சேர்த்து, ஒன்று சேர கலந்து விடவும். வறுத்துப் பொடித்த சீரகத்தூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். கோடைக்கேற்ற, நீரேற்றம் தரும் சுவையான சாலட்!!