அடை சுவையாக இருக்க அடடே இப்படியும் செய்யலாமே… இதோ பயனுள்ள டிப்ஸ்!

Adai Suvayaai Irukka... here are some useful tips!
Adai - Dosai recipes tipsImage credit ; chettinadsnacks
Published on

டை மாவை அரைத்து எடுப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக சின்ன வெங்காயம் நான்கைந்து சேர்த்து அரைத்தால், அடை மிருதுவாகவும், பொன் நிறமாகவும் இருக்கும்.

சிறிது ஜவ்வரிசி, சிறிது கோதுமை ஊறவைத்து, அடை மாவுடன் சேர்த்து அரைத்தால், அடை மொறுமொறுப்பாக இருக்கும்.

வெங்காயம் பொடி கலந்தால் அடைமாவில் சிறிது பெருங்காய தூள் கலந்தால் வாசனையாக இருப்பதோடு, பருப்புகளால் ஏற்படும் வாய்வுத் தொல்லைகளையும் நீக்கும்.

அடை மாவு அரைக்கும்போது, வரமிளகாயைக் குறைத்து, மிளகு சேர்த்தால், அல்சர் பிரச்னைகள் ஏற்படாது.

அடைமாவுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால், மணமும் கூடும். எளிதில் ஜீரணமும் ஆகும்.

அடைக்கு மாவு சற்று கரகரப்பாக இருந்தால்தான், அடை மொறுமொறுப்பாக இருக்கும்.

அடை மாவை தடிமனாக தவாவில் ஊற்றாமல், தோசை போல் மெலிதாக வளர்த்தால், எளிதில் ஜீரணம் ஆகும். மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

அடக்கி அரைக்கும்போது சில கற்பூரவள்ளி இலைகளை சேர்த்தால் மணமும் கிடைக்கும் எளிதில் ஜீரணமும் ஆகும்.

சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, மசித்து, மாவில் கலந்து அடைகள் வார்த்தால், அடை மிருதுவாக இருக்கும். சுவையும் கூடும்.

தோசை டிப்ஸ் சில

தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிறிது வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்தால் தோசை சுவை கூடி, மணமாகவும் இருக்கும்.

தோசை மாவில் சிறிது நல்லெண்ணெய் கலந்துவிட்டால், தோசை மணமாக இருக்கும். தோசைக்கல்லில் இருந்து தோசையும் எளிதாக வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை சமநிலையில் வைக்கும் ஜூஸ் வகைகள்-5
Adai Suvayaai Irukka... here are some useful tips!

சப்பாத்தி செய்த தவாவில், தோசை வார்த்தால் ஒட்டிக்கொண்டு எடுப்பது சிரமம். எனவே தோசைக்கு தனியாகவும், சப்பாத்திக்கு தனியாகவும், தவா வைத்துக்கொள்வது நல்லது.

தோசை மாவு மிஞ்சிப்போனால், ஹாட் பாக்ஸில் வைத்துவிட்டால், நீண்ட நேரம் புளிக்காமல் அதே பக்குவத்தில் இருக்கும்.

தோசைக்கு அரைக்கும்போது, சிறிது துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்தால், தோசை மொறு மொறு என்று இருக்கும்.

தோசை மாவு புளிக்காவிட்டால், அதில் சிறிது தக்காளிசாறு அல்லது புளித்த மோர் கலந்தால், மாவு புளித்து சுவையாகிவிடும்.

தோசை மாவு அரைக்கும்போது சில வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால், தோசை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

தோசை மாவு அதிகம் புளித்துவிட்டால், அதை சிறிது சர்க்கரை கலந்தால், புளிப்பும் குறையும்.‌ மொறுமொறுப்பும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
வக்கணையா சாப்பிட கிழங்கு தோசையும் பொரியலும்!
Adai Suvayaai Irukka... here are some useful tips!

தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்க, ஒரு பச்சை மிளகாயை கீறி அதில் போட்டு வைத்தால்போதும். பச்சை மிளகாய் மணமும் சேரும்.

தோசைக்கல் மிகவும் சூடாகிவிட்டால், சரியாக தோசை எடுக்க வராது. இதனால் சிறிது நீரை கல்லில் தெளித்து விட்டு, இரவு வார்த்தால் தோசை சரியாக வரும்.

தோசை மாவு நீர்த்துப் போயிருந்தால், அதில் சிறகு வறுத்த ரவை கலந்து, சில நிமிடங்களுக்கு பிறகு, தோசை வார்த்தால், மாவு தோசை, ரவா தோசை ஆகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com