குளிர்ச்சியான உடல் வேண்டுமா? அப்போ இந்த 4 உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க!

summer-diet-foods
summer-diet-foods
Updated on

மிழ்நாடு முழுவதும் கோடைவெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெளி வெப்பம் மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் சில உணவுகளும் நம் உடலுக்கு சூட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் டிஹைட்ரேஷன் (dehydration) ,அசிடிட்டி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கோடை காலத்தில் உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

சிவப்பு மிளகாய், கரம் மசாலா

பொதுவாகவே கோடை காலத்தில் உணவில் காரம் சேர்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் சிவப்பு மிளகாய், கரம் மசாலா சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடலில் வெப்பத்தை அதிகரித்து அதிகமாக வியர்க்க வைப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கிவிடும். ஆகவே கோடைகாலத்தில் சிவப்பு மிளகாய் கரம் மசாலாவுக்கும் 'நோ' சொல்லிடுங்க.

பொரித்த மற்றும் ஜங்க் ஃபுட்

கோடைகாலத்தில் பொரித்த உணவுகளும், ஜங்க் ஃபுட் சாப்பிடுவது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி வகுத்துவிடும். குறிப்பாக சமோசா, பக்கோடா, பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற எண்ணெயில் ஆழமாக பொரித்த உணவுகள் உடலில் வெப்பத்தை அதிகரித்து செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் இவற்றிற்கு கோடை காலத்தில் 'டாட்டா'சொல்வது மிகவும் நல்லது. இந்த வகை உணவுகளை தவிர்க்க முடியவில்லை என்றால் ஏர் ஃபிரையர் பயன்படுத்தி குறைவான எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது நல்லது.

காபி போன்ற காஃபின் உள்ள பானங்கள்

கோடை காலத்தில் காபி மற்றும் காஃபின் உள்ள பானங்கள் உடலை உள்ளிருந்து வெப்பமடைய செய்கின்றன. மேலும் அதிக சூட்டின் காரணமாக காபி மற்றும் தேநீர் குடிப்பதால் சில நேரங்களில் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படக் கூட வாய்ப்பு அதிகம் இருப்பதால் கோடை காலத்தில் இவற்றிற்கு குட் பை சொல்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீம் கோன் உருவான கதை தெரியுமா? ஒரு 'கிண்ணம்' இல்லாததால் பிறந்த புதுமை!
summer-diet-foods

ரெட் மீட் மற்றும் அதிக புரோட்டீன்

உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் ரெட் மீட் கோடைகாலத்தில் ஜீரணிக்க மிகவும் கடினமானது . இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. ஆகவே கோடை காலத்தில் ரெட் மீட் மற்றும்அதிக புரோட்டின் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது . மேலும் அதிக உப்பு சேர்த்த சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கி உடலில் டீ ஹைட்ரேஷனை ஏற்படுத்தும் என்பதால் கோடையில் உப்பை குறைத்து பயன்படுத்துவது நல்லது.

மேலும் சோம்பலை உண்டாக்கும் அதிக சர்க்கரை உள்ள பானங்களையும் இனிப்புகளையும் கோடை காலத்தில் குறைத்தால் உடல் சூடாவது தடுக்கப்படும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெயில் காலத்தில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி தயிர், மோர், பால் போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய வீட்டில் சமைத்த உணவுகளே உடம்பிற்கு நண்பனாக செயல்பட்டு உடலை கூலாக வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com