கோடைக்கேற்ற ஆரோக்கிய காம்போ: சிவப்பு பருப்பு டிக்கி முதல் தர்ப்பூசணி–நாவல் பழ டெசர்ட் வரை!

இளநீர், தர்ப்பூசணி, நாவல் பழம், புதினா கலவையால் கோடைக்கேற்ற குளிர்ந்த டெசர்ட்; வயிறு நிரம்பிய உணர்வு தரும் சிவப்பு பருப்பு டிக்கியுடன் சேர்த்து முழுமையான ஆரோக்கிய காம்போ.
summer-healthy-recipes
summer-healthy-recipes
Updated on

மாலை நேரத்தில் உட்கொள்வதற்கு ஏற்றதாகவும்  மிகவும் சுவையானதுமான மைசூர் சிவப்பு பருப்பு டிக்கி தயாரிப்பு குறித்து இப்பதிவில் காண்போம். காய்கறிகளுடன் தயாரிப்பதால் புரதம் நிறைந்த இந்த டிக்கி உடலுக்கு இதமாக இருக்கும்‌  இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஊறவைத்த பருப்பை  கொரகொரப்பாக அரைப்பதுதான். இப்படி அரைப்பதால் டிக்கியின் மேல் பக்கம் கரகரப்பாகவும் உள்ளே மென்மையாகவும் காணப்படும். 

இதில் பன்னீரும் சேர்க்கப்படுவதால் சுவை அதிகமாகிறது.  மேலும் காரட், காப்சிகம் போன்ற காய்கறிகளும் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. எல்லாம் சேர்த்து பிறகு தளர்ந்த நிலையில் இருந்தால் சிறிது கடலைமாவு சேர்த்து கெட்டிப்படுத்தலாம். இந்த டிக்கியை தயாரிக்க அதிக எண்ணெய் தேவைப்படாது.  இது எல்லா வயதினருக்கும் ஏற்றது.

சிவப்பு பருப்பின் நன்மைகள்

தாவரப் புரதம் நிறைந்த இது அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இதனால் இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.  செரிமானத்திற்கு ஏற்றது‌  மேலும் இதில் இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான ஊட்டச் சத்துக்களும் உள்ளதால் உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு ஏற்றது. 

தேவையானவை:

சிவப்பு பருப்பு. ஒருகப்

துருவிய பன்னீர் அரை கப்

பொடியாய் அரிந்து வெங்காயம் 1

காரட் குருவிற்கு 1

குடமிளகாய் பொடியாய் அரிந்தது 1

பச்சைமிளகாய் அரிந்தது 2

இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி தழை 2டேபிள் ஸ்பூன்

தேவையாக இருப்பின் 2டேபிள் ஸ்பூன் கடலைமாவு.

மிளகாய் பொடி  அரை டீஸ்பூன்

சீரகப் பௌடர் அரை டீஸ்பூன்

உப்பு எண்ணை தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
வயிறு சூட்டைத் தணிக்கும் சூப்பர் ரெசிபி... சத்துகள் நிறைந்த 'குலித் கலான்' செய்வது இவ்வளவு சுலபமா?
summer-healthy-recipes

தயாரிப்பு:

சிவப்பு பருப்பை ஊறவைக்கவும். இதனால் அரைக்கும்போது மென்மையாக இருக்கும். தண்ணீரை இருந்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

இதை ஒரு பௌலில் சேர்த்து அதில் பன்னீர், வெங்காயம், காரட்,  குடமிளகாய், பச்சைமிளகாய் இஞ்சி விழுது மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.

பிறகு உப்பு, மிளகாய் பொடி சீரகப்பொடி சேர்த்து  கலந்து வைக்கவும்.‌ தளர்ந்து இருந்தால் கடலைமாவு சேர்க்கவும்

இக்கலவையிலிருந்து சிறு உருண்டைகளை எடுத்து தட்டையாக்கி வைத்துக்கொள்ளவும். இதை தோசைக் கல்லில் எண்ணை விட்டு இருபுறமும் கோல்டன் நிறத்தில் வேக வைத்து எடுக்கவும்.  இவை நல்ல கரகரப்பாக இருக்கும். புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

கோடைக் கேற்ற பழ இனிப்பு

தேவையானவை:

இளநீர் அரை கப்

தர்ப்பூசணி அரை கப்

கொட்டை எடுக்கப்பட்ட நாவல் பழம் அரை கப்

புதினா இலை

கருப்பு உப்பு  அரை டீஸ்பூன் 

இதையும் படியுங்கள்:
மண்பானை வாங்கியதும் இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க.. பாதுகாப்பாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ்!
summer-healthy-recipes

தர்ப்பூசணியை அரிந்து அத்துடன் நாவல்பழம் கருப்பு உப்பு இளநீர் மற்றும் புதினா சேர்த்து அரைக்கவும்.  நன்கு அரைத்த பிறகு இதை வடிகட்டவும். இதை நல்ல ஆழமான டம்பளர்களில் சேர்த்து அதன்மீது அலுமினியம் பேப்பரால் மூடி ஃப்ரிட்ஜ் ஜில் எட்டு மணிநேரம் வைத்து உட்கொள்ளவும். கோடைக்கேற்ற டெசர்ட் ஆகும்.  புத்துணர்ச்சி தரக்கூடியது.

logo
Kalki Online
kalkionline.com