
நாட்டு சர்க்கரை ஸ்வீட் வடை
உளுந்து கால்கிலோ, கடலைபருப்பு, துவரம்பருப்பு, பொட்டுக்கடலை, தலா 50கிராம், முந்திாி 25கிராம் இவைகளை ஒருமணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு தண்ணீா்விடாமல் மசிய அரைக்கவும்.
பின்னா் கால்கிலோ நாட்டு சா்க்கரை, மற்றும் ஏலக்காய் பொடி போட்டு, மிக்சியில் மாவுபோல அரைத்தெடுத்து கிரைண்டரில் உள்ளமாவுடன் சோ்த்து அரைக்கவும், பின்னர் நன்கு கையால் பிசைந்து வடைபோல தட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும், சூப்பர் டேஸ்ட் சத்தான ஸ்வீட் வடை ரெடி
உருளை, கேரட் கார புட்டு
கால் கிலோஉருளை, நூறுகிராம் கேரட்டை, வேகவிட்டு தோல் நீக்கி, உப்பு சோ்த்து மசித்து வைக்கவும். வானலியில் சிறிது எண்ணைய் விட்டு உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, சீரகம் ஒரு மேசைக்கரண்டி, தேவையான கடுகு இவைகளை தாளித்து பின்னா் நறுக்கிய வெங்காயம் சிறியதாய் நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை இவைகளை துளி எண்ணைய் விட்டு வதக்கி வெங்காயம் நன்கு வெந்ததும் தாளிப்பு மற்றும் உருளை கேரட் மசியலோடு சோ்த்து தேங்காய் துருவல் கலந்து அனைத்தையும் ஒன்றாக சோ்த்துகிளறி இறக்கவும். சூப்பர் டேஸ்ட் புட்டு ரெடி மாலை நேர சிற்றுண்டி ரெடி.
கேரட், பாஸந்தி (திரீ லெவல் மல்டி டேஸ்ட்)
சுரைக்காய் துருவியது, இரண்டுகப், வெள்ளரிக்காய் துருவியது, ஒருகப் கேரட்துருவியது இரண்டு கப், இவைகளை நன்கு வேகவிட்டு மசித்துக்கொள்ளவும்,
ஒரு லிட்டர் பாலை பொிய பாத்திரத்தில் காய்ச்சவும், பின்னா் ஐந்து கப் சீனியை போடவும். பாலும் சீனியும் கொதித்து வரும்போது வேகவைத்து மசித்த மூன்று வகை காய்கறிவகைகளை அதில் போட்டு நன்கு ஒன்றுசேர கிளறவும்.
தொடர்ந்து தேவையான அளவுக்கு முந்திாி, பாதாம், இவை களை பொடிப்பொடியாக நறுக்கி, வேகவைத்த பிஸ்தா பருப்புடன், சோ்த்து, பாலில் போடவும், நன்கு கைவிடாமல் கிளறவும்.
அதோடு குங்குமப்பூ, ஏலக்காய் கிராம்பு பொடியை சோ்க்கவும், விருப்பம் உள்ளவர்கள் ரோஜாப்பூ எசன்ஸ் கொஞ்சம் சோ்த்துக்கலாம்.
கொளுத்தும் கோடை காலத்திற்கேற்ப, ஆரோக்கியமான குளிர்ச்சியான பாஸந்தியை, மாலை நேரத்தில் கொடுக்கலாம் குழந்தைகள் மற்றும் பொியவர் விருந்தினா்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவாா்கள்.
காரம் ரெசிபீஸ்
பாலக்கீரை, கோஸ், மல்லி, கதம்ப பக்கோடா
பாலக்கீரை, கொத்தமல்லி தழை, இவைகளை நன்கு அலசி, அதோடு முட்டைக்கோஸ், வெங்காயம் சோ்த்து, இவைகளை பொடிப்பொடியாய் நறுக்கி, கடலைமாவு, பொட்டுக் கடலைமாவு , சோளமாவு, தேவைக்கேற்ப கலந்து, உப்பு, காயத்தூள், காரப்பொடி, இஞ்சி, பெருஞ்சீரகம், ஓமம்,சோ்த்து, தயிா் ஒரு கரண்டிவிட்டு, கொஞ்சம் நெய் சோ்த்து பிசைந்து, தூள் தூளாக, நன்கு காய்ந்த எண்ணையில் போட்டு, பொாித்து மிருதுவாக எடுக்க சுவையான பக்கோடா தயாா், எதுவும் தொட்டுக்கொள்ளாமலே, அப்படியே சாப்பிடலாம்.
விரும்பும் நபர்கள் மதியம் மீதமிருக்கும் சாம்பாா் போட்டுக்கொள்ளலாம். கரகரப்பாகவும், மிருதுவாகவும், நல்ல சுவையாகவும் இருக்கும், மாலை நேர சிற்றுண்டியாகும்.