சூப்பர் சுவையில் ரவா இட்லி - உருளைக்கிழங்கு ரைஸ் ரெசிபிஸ்!

 rava idli and potato rice recipes
Rava idli and Potato rice recipes
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு செம டேஸ்டான ரவா இட்லி மற்றும் உருளைக்கிழங்கு ரைஸ் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

நெய் - 2 தேக்கரண்டி.

கடுகு - 1 தேக்கரண்டி.

சீரகம் - 1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி.

உளுந்து - 1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள் - சிறிதளவு.

கருவேப்பிலை - சிறிதளவு.

ரவா - 1 கப்.

தயிர் - 1 கப்.

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1 துண்டு.

உப்பு - தேவையான அளவு.

ரவா இட்லி செய்முறை விளக்கம்:

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிவிட்டு 1 கப் ரவையை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

இப்போது இது ஆறியதும் பவுலில் மாற்றிவிட்டு கெட்டி தயிர் 1 கப் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

இப்போது இட்லி தட்டில் சிறிது நெய் தடவி விட்டு அதில் செய்து வைத்திருக்கும் மாவை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

உருளைக்கிழங்கு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 2 தேக்கரண்டி.

கடுகு - 1தேக்கரண்டி.

சீரகம் - 1 தேக்கரண்டி.

உளுந்து - 1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய் - 1

கருவேப்பிலை - சிறிதளவு.

வெங்காயம் - 1

உருளைக்கிழங்கு - 1

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி.

உப்பு - தேவையான அளவு.

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி.

சாதம் - 1 கப்.

கொத்தமல்லி - சிறிதளவு.

உருளைக்கிழங்கு ரைஸ் செய்முறை விளக்கம்:

முதலில் கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு 1, மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் மூடி வேகவிடவும்.

இப்போது இதில் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு சாதம் 1 கப்பை சேர்த்து கலந்துவிட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு ரைஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் டேட்ஸ் கொழுக்கட்டை-கார பணியாரம் செய்யலாம் வாங்க!
 rava idli and potato rice recipes
logo
Kalki Online
kalkionline.com