சுவையா சாப்பிடுவதற்கு ஸ்வீட் கார்ன் ரெசிபிஸ்..!

sweet corn recipes
sweet corn recipes
Published on

ற்போது ஸ்வீட் கார்ன் எனப்படும் சோளக்கதிர்கள் தாராளமாகக் கிடைக்கிறது. இதில் நலம் தரும் பல நன்மைகள் உள்ளதால் குழந்தைகள். கர்ப்பிணிகள்  என அனைவரும் சாப்பிட ஏற்றதாக உள்ளது.

செரிமானத்திற்கு உதவி, இதய ஆரோக்கியத்தை பேணுவது.  இரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது போன்ற பல நன்மைகள் தரும்  இதை சூப், சாலட், பாப்கார்ன் போன்ற பல உணவு வகைகளில் சாப்பிடலாம். தினமும் நாம் எடுக்கும் 100 கிராம் ஸ்வீட் கார்ன் உடலுக்கு போதுமான சத்துக்களை அளிக்கிறது என்கிறது குறிப்புகள்.

ஸ்வீட்கார்ன் ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு-  1 கப்
ஸ்வீட் கார்ன் முத்துக்கள்- 1 கப்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
சில்லி ப்ளேக்ஸ்- தேவைக்கு
மிளகு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை-  கால் கட்டு எலுமிச்சைச்சாறு - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு

செய்முறை:
ஸ்வீட் கார்ன் முத்துக்களுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை  போட்டு மிக்சியில் இட்டு சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். சலித்த கோதுமை மைதாமாவுடன் அரைத்த விழுது சேர்த்து உப்பு, உருகிய நெய், எலுமிச்சைச்சாறு, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது நேரம் கழித்து சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் விட்டு சுட்டு மேலே சில்லி  பிளேக்ஸ், மிளகுத்தூள் தூவி சூடாக சாப்பிடலாம்.இதுவே ஸ்வீட் கார்ன் ரொட்டி.

ஸ்வீட் கார்ன் கிரேவி
தேவை:

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1  டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தக்காளி- 1
கொத்தமல்லி கருவேப்பிலை-  சிறிது தனியா தூள் , சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1 டீஸ்பூன்
கடுகு - தாளிக்க 
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் எண்ணெய் உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சத்தான சாபூதானா- கேரட் மிக்ஸ்ட் பிடி கொழுக்கட்டை ஸ்பெஷல்!
sweet corn recipes

செய்முறை:

பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கவும். பாதி முத்துக்களை மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் ஸ்வீட் கார்ன் விழுது மற்றும் மீதமுள்ள முழு கார்ன் முத்துகள் சேர்த்து கூடவே தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான உப்பு மற்றும்  ஒன்றிரண்டாக அரைத்த தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி அரை கப் நீர் சேர்த்து மூடி மிதமான தீயில் வேகவிடவும் ஸ்வீட் கார்ன் வெந்து தனியா பச்சை வாசம் போனதும் இறக்கி கொத்தமல்லிதழை தூவி பரிமாறலாம்.

ஸ்வீட் கார்ன் சுண்டல்
தேவை:

உதிர்த்த கார்ன் முத்துகள் - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
சோம்பு - சிறிது
பச்சை மிளகாய் - 2
மாங்காய் - சிறிது துருவியது கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தாளிக்க 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு – தேவைக்கு

இதையும் படியுங்கள்:
இவற்றையெல்லாம் பாழாக்க வேண்டாம், பயன் படுத்துங்கள்...
sweet corn recipes

செய்முறை:

சோளமுத்துக்களை ஆவியில் ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்து வடித்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயத்துடன் தேவையான உப்பு போட்டு வதக்கலாம். வெங்காயம் வதங்கியதும் துருவிய மாங்காய் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள சோள முத்துக்களை போட்டு கூடவே தேங்காய் துருவல் போட்டு இறக்கும்போது கொத்தமல்லி கருவேப்பிலை பெருங்காயம் தூவி இறக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com