இனிப்பு ராகி அடை!

இனிப்பு ராகி அடை!
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

தேவையான பொருட்கள் :

  • ராகி 2 கப்

  • வெல்லப் பொடி - முக்கால் கப்

  • ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்

  • தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்

  • எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை :

ராகியை வாணலியில் வறுத்து, மாவாக பிடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லப் பொடியை போட்டு, சிறிதளவு நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி, இளம் பாகு காய்ச்சி இறக்கி, அதில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ராகி மாவு கலந்து பிசையவும். வாழை இலையில் எண்ணெய் தடவி, மாவை உருட்டி, தட்டி எடுத்து தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான இனிப்பு ராகி அடை ரெடி.

logo
Kalki Online
kalkionline.com