டேஸ்டியான வாழைப்பழ தோசை மற்றும் சிறுபருப்பு ஜவ்வரிசி பாயசம் ரெசிபிஸ்!

banana dosai - payasam recipes
Tasty rfecipes
Published on

ன்றைக்கு சுவையான வாழைப்பழ தோசை மற்றும் சிறுபருப்பு ஜவ்வரிசி பாயசம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

வாழைப்பழ தோசை செய்ய தேவையான பொருட்கள்.

வாழைப்பழம்-2

நாட்டு சர்க்கரை-1 கப்.

தோசைமாவு-1 கப்.

ஏலக்காய்-4

மிளகுத்தூள்-1 சிட்டிகை.

நெய்-தேவையான அளவு.

வாழைப்பழ தோசை செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் தோசைமாவு 1 கப் எடுத்துக்கொள்ளவும். இப்போது இரண்டு வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி பால் கொஞ்சம் விட்டு நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதையும் தோசை மாவுடன் சேர்த்து விட்டு நாட்டு சர்க்கரை 1 கப், ஏலக்காய் 4, மிளகுத்தூள் 1 சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்துவிட்டு நெய் 1 தேக்கரண்டி விட்டு தோசை ஊற்றுவது போலவே மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ தோசை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

சிறுபருப்பு ஜவ்வரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.

சிறுபருப்பு-1/2 கப்.

ஜவ்வரிசி-1/2 கப்.

வெல்லம்-3/4 கப்.

தேங்காய்-1 கப்.

ஏலக்காய்-2

நெய்-தேவையான அளவு.

முந்திரி-10.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் பட்டன் இட்லி - தக்காளி ஊறுகாய் செய்யலாமா?
banana dosai - payasam recipes

சிறுபருப்பு ஜவ்வரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.

முதலில் ½ கப் சிறுபருப்பு வறுத்துவிட்டு தண்ணீரில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பருப்பு நன்றாக குழைந்து வரும்போது ஊறவைத்த ½ கப் ஜவ்வரிசியையும் இத்துடன் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ¾ கப் வெல்லம் எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதையும் சிறுபருப்புடன் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேங்காய் 1 கப், ஏலக்காய் 2 சிறிது தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அந்த பாலையும் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக, 10 முந்திரியை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான சிறுபருப்பு ஜவ்வரிசி பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com