
வாழைப்பழம் சத்தும் சுவையும் நிறைந்த ஒரு பழம். இதைப் பயன்படுத்தி பல இனிப்பு, ஸ்நாக்ஸ், பானங்கள் போன்றவை எளிதாக செய்யலாம். சில வாழைப்பழ ரெசிபிகள் (Tasty Banana Recipes) பற்றி பார்க்கலாம்.
வாழைப்பழ பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 2
கடலைமாவு – 1 கப்
அரிசிமாவு – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
சோடா – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை: வாழைப்பழத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு, சோடா சேர்த்து தண்ணீரில் கலந்து பஜ்ஜி மாவு தயாரிக்கவும். வாழைப்பழ துண்டுகளை அந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.
வாழைப்பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – 2
பால் – 1 கப்
தேன் – 2 டீஸ்பூன்
ஐஸ் – தேவைக்கு
செய்முறை: மிக்ஸியில் வாழைப்பழம், பால், தேன், ஐஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும். குளிர்ச்சியாக பரிமாறலாம்.
வாழைப்பழ பன்கேக்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1 (மசித்தது)
மைதா – 1 கப்
பால் – ½ கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை: மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும். அதில் மசித்த வாழைப்பழம், பால் சேர்த்து அடர்த்தியாக கலக்கவும். தவாவில் வெண்ணெய் தடவி சிறிய அளவில் ஊற்றி பன்கேக் சுடவும். தேன் அல்லது சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறலாம்.
வாழைப்பழ ஹல்வா
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – 3 (மசித்தது)
நெய் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – ½ கப்
ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
முந்திரி – அலங்கரிக்க
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி வாழைப்பழம் மசித்ததை வதக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி முந்திரி தூவி பரிமாறவும்.
வாழைப்பழ கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
வாழைப்பழம் – 2 (மசித்தது)
சர்க்கரை – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – சிறிதளவு
ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
தண்ணீர் – 2 ½ கப்
செய்முறை: ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில் ரவையை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி அதில் மசித்த வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். அப்படிச் சுண்டிய பின் வறுத்த ரவை சேர்த்து சீராக கிளறவும். அடைபோல் கெட்டியானதும் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். நெய் தடவிய தட்டில் ஊற்றி குளிர்ந்ததும் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
வாழைப்பழ பாயாசம்
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – 2
பால் – 2 கப்
வெல்லம் – ½ கப்
தேங்காய்பால் – ½ கப்
ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை: வாழைப்பழத்தை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துவைக்கவும். அதே கடாயில் வாழைப்பழ துண்டுகளை போட்டு சற்று நன்றாக வதக்கவும். பின் பால் சேர்த்து கொதிக்கவிடவும். வாழைப்பழம் நன்றாக கலந்துவிட்டால், வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும். பாயாசம் அடர்த்தியாகும் வரை கிளறி, இறுதியில் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்கவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். சூடாகவும் குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.