மாம்பழ சீசன் ஸ்பெஷல்: புளிப்பும் இனிப்பும் கலந்த மாங்காய் பலகாரங்கள்!

Tasty Mango recipes
Tasty Mango recipes
Published on

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் – 2 கப்

கிளி மூக்கு மாங்காய் துருவல் – 1 கப்

இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்

நறுக்கிய பச்சை மிளகாய் – 4

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

வேர்க்கடலை – ஒரு கப்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை;

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் வேர்க்கடலையைப் பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்த மல்லித்தழை சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மாங்காய் துருவலைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

மாங்காய் நன்கு வதங்கியதும், வடித்த சாதத்தை ஆறவைத்து சேர்த்து கிளறி, ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். இறுதியாக பொரித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மேங்கோ புலாவ்

தேவையான பொருட்கள்:

அரிசி – 2 கப்

கிளி மூக்கு மாங்காய் – 1 No

பெரிய வெங்காயம் – 2 No

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

நெய் – அரை கப்

எண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – 1 கப்

அரைக்க:

இலவங்கப்பட்டை – 2 no

சோம்பு – ½ ஸ்பூன்

கிராம்பு – 2 no

ஏலக்காய் – 2 no

கசகசா – ¼ ஸ்பூன்

கொத்தமல்லித்தழை, புதினா இலை, பச்சை மிளகாய் – 6 no

தாளிக்க:

பிரிஞ்சி இலை – 2 no

அன்னாசிப்பூ – 2 no

கல்பாசி – சிறிதளவு

இதையும் படியுங்கள்:
நாவூறும் தக்காளி பொங்கலும், மணக்கும் வரமல்லி துவையலும் - அசத்தலான காம்போ ரெசிபி!
Tasty Mango recipes

செய்முறை:

மாங்காயை கொட்டை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து வதக்கவும்.

பாதியளவு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து, மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

தண்ணீர், உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசியைப்போட்டு குக்கரை மூடி வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, திராட்சை, மீதமுள்ள வெங்காயம், இஞ்சி துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

பொரித்த வெங்காயத்தை புலாவ் மேல் பரப்பி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்பு: தேவையான அளவுக்கு சிறிது குறைவாக தண்ணீர் சேர்த்தால் புலாவ் உதிரியாக இருக்கும்.

மாங்காய்த் துவையல்

ஒரு கப் மாங்காய் துருவலுடன் இஞ்சி, பூண்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், உப்பு புளி ஒரு நெல்லிக்காய் அளவு சேர்த்து நன்கு வறுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து மாங்காய் துவையலில் கொட்டி கலந்து பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
இனிப்பு, புளிப்பு, காரம்: ஒரே கொய்யாவில் அசத்தலான 3 சைடு டிஷ்!
Tasty Mango recipes

மாங்காய் பச்சடி

துருவிய மாங்காயுடன் இஞ்சி துருவல், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது மிளகாய்த்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிசறி சிறிது நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய மாங்காய் பச்சடியை தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com