வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான, சத்தான போண்டா ரெசிபிகள்!

கீரை, கிழங்கு, வாழைப்பழம், தேங்காய் சேர்த்து சத்தும் சுவையும் நிறைந்த பல வகை போண்டா வகைகள்.
bonda-recipes-at-home
bonda-recipes-at-home
Updated on

கல்யாண முருங்கை இலை போண்டா

தேவை:

கல்யாண முருங்கை இலை – 1 கப் (சுத்தமாக கழுவி நறுக்கியது)

கடலைமாவு – 1 கப்

அரிசிமாவு – 2 டீஸ்பூன்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

இஞ்சி – 1 டீஸ்பூன் (சிறிய துண்டுகள்)

உப்பு – தேவைக்கு

மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, சோடா உப்பு, மிளகாய்த் தூள், சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, நறுக்கிய முருங்கை இலை சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடர்த்தியான மாவு பிசையவும். காய்ந்த எண்ணெயில் சிறிய உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக வரும் வரை பொரித்தெடுக்கவும். சுவையான கல்யாண முருங்கை இலை போண்டா ரெடி.

மைதா இனிப்பு போண்டா 

தேவை:

மைதா மாவு - அரை கிலோ

சர்க்கரை - அரை கிலோ

ஏலக்காய் - 3 (பொடியாக்கியது)

உப்பு - தேவைக்கேற்ப

தேங்காய் துருவல் - 1 கப்

வாழைப்பழம் - 2 (சிறியது)

இதையும் படியுங்கள்:
சோலே பட்டூரா: இந்த ஒரு பொருளை சேர்த்தா டேஸ்ட் சும்மா அள்ளும்!
bonda-recipes-at-home

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும். 

அதன் பிறகு அதனுடன் ஏலக்காய், உப்பு போட்டு பிசையவும். இறுதியாக தேங்காய்த் துருவல், வாழைப்பழம் சேர்த்து அனைத்தையும் ஓரளவிற்கு கெட்டியாக இருக்குமாறு பிசைந்து கொள்ள வேண்டும்.  அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான மைதா இனிப்பு போண்டா தயார்.

மல்டி கீரை போண்டா

தேவை: 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, 

அரிசி மாவு - ஒரு கப், 

சோயா மாவு, கடலை மாவு - தலா 2 டீஸ்பூன்,  

பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை - தலா ஒரு கப், 

பொடியாக நறுக்கிய புதினா, முள்ளங்கி இலை - தலா ஒரு கைப்பிடி, 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 

பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சுவையான சமையல் குறிப்புகள்: பருப்பு அடை முதல் லட்டு வரை வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய டிப்ஸ்!
bonda-recipes-at-home

செய்முறை: 

சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் உரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்... நறுக்கிய வெந்தயக்கீரை, முளைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, முள்ளங்கி இலை, பச்சை மிளகாய், பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்துப் பிசைந்து, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

அரிசி மாவு, சோயா மாவு, கடலை மாவு சேர்த்து, சிறிது உப்பு போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதில் உருண்டைகளைத் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான, சத்தான மல்டி கீரை போண்டா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com