டீ கடை ஸ்டைல் மொறுமொறு மசாலா வடை: சொட்டு எண்ணெய் குடிக்காமல் வீட்டிலேயே செய்வது எப்படி?

மழைக்கால மாலையை சுவையாக்கும் ரகசிய டீ கடை மசாலா வடை எளிய செய்முறை விளக்கம்.
மசாலா வடை - Tea Kadai Vadai
மசாலா வடை - Tea Kadai VadaiAI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

ழைக்காலம் வந்தாலே நம் நினைவுக்கு வருவது சுடச் சுட குடிக்கும் தேநீரும், அதற்குத் தொட்டுக்கொள்ள ஏதுவான மொறுமொறுப்பான மசாலா வடையும்தான். தெருவோர டீ கடைகளில் வீசும் அந்த மசாலா வடையின் நறுமணமும், கடித்தவுடன் ஏற்படும் மொறுமொறுப்பும் எல்லோரையும் சுண்டி இழுக்கும் ஒரு தனித்துவமான சுவையாகும்.

கடைகளில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் அதே டீ கடை ஸ்டைல் மொறுமொறு மசாலா வடையை, மிக எளிய முறையில் நம் வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதைப் பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு: 1 கப்

பெரிய வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய்: 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி: 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

பூண்டு: 5 முதல் 6 பற்கள் (தோலுடன் தட்டியது)

சோம்பு: 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்: 2 அல்லது 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

பெருங்காயத்தூள்: ¼ தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு

எண்ணெய்: வடை பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை நன்கு கழுவி, குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பருப்பு சரியாக ஊறியிருந்தால் மட்டுமே வடை வெளிப்பக்கம் மொறுமொறுப்பாகவும் உட்பக்கம் மென்மையாகவும் வரும். ஊறவைத்த பருப்பில் 2 மேஜைக்கரண்டி பருப்பைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்துத் தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவேண்டும்.

அரைத்த மாவுடன் தனியாக எடுத்து வைத்த முழு கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டிக்கொள்ள வேண்டும். ஓரங்கள் மெலிதாகவும் நடுப்பகுதி லேசான தடிமனாகவும் இருக்குமாறு தட்டுவது டீ கடை ஸ்டைல் மொறுமொறுப்பைத்தரும்.

மசாலா வடை - Tea Kadai Vadai
மசாலா வடை - Tea Kadai Vadai

ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வடைகளைப் போடவேண்டும். இருபுறமும் நல்ல பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் சுவையான மசாலா வடை தயார்.

சரியான முறையில் பருப்பை அரைத்து, மிதமான தீயில் பொரித்தெடுக்கும் போது டீ கடைகளில் கிடைக்கும் அதே மொறுமொறுப்பும் சுவையும் நமக்குக் கிடைக்கும். மழை பெய்யும் மாலை வேளையில், சுடச்சுட ஃபில்டர் காபி அல்லது இஞ்சி டீயுடன் இந்த மசாலா வடையைப் பரிமாறி மகிழ்வது ஒரு அலாதியான இன்பமாகும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
மசாலா வடை - Tea Kadai Vadai

மசாலா வடை அதிக எண்ணெய் குடிக்காமல், வெளிப்பக்கம் நல்ல மொறுமொறுப்பாகவும் உட்பக்கம் வெந்தும் வர உதவும் சில டிப்ஸ்:

1. பருப்பை அரைக்கும்போது ஒரு சொட்டுத்தண்ணீர் கூட சேர்க்காமல் அரைக்கவேண்டும். மாவில் ஈரம் அல்லது தண்ணீர் அதிகமிருந்தால் வடை அதிக அளவு எண்ணெயைக் குடிக்கும்.

2. பருப்பை மைய அரைக்கக் கூடாது. கொரகொரப்பாக  அரைத்தால் மட்டுமே வடை மொறுமொறுப்பாக வரும்.

3. மாவு அரைத்த பிறகு, ஊறவைத்த முழு கடலைப்பருப்பில் சிறிதளவை மாவுடன் சேர்த்துப் பிசையவும். இது வடைக்கு நல்ல மொறுமொறுப்பான அமைப்பைத்தரும்.

4. பூண்டை நைஸாக அரைக்காமல் தோலுடன் தட்டிச் சேர்ப்பது வடைக்கு டீ கடை வாசனையையும் தனி ருசியையும் தரும்.

5. வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிச் சேர்க்கவேண்டும். அளவுக்கு அதிகமாக வெங்காயம் சேர்த்தால், வெங்காயத்தில் உள்ள ஈரம் வடையை மென்மையாக்கி எண்ணெய் குடிக்கச் செய்துவிடும்.

6. எண்ணெய் நன்றாகச் சூடான பிறகே வடைகளைப் போடவேண்டும். மிதமான சூடு இல்லையெனில் வடை  எண்ணெய் முழுவதையும் உறிஞ்சிவிடும்.

7. மாவு ஒருவேளை தளர்வாகிவிட்டால், 1-2  அரிசி மாவு  சேர்த்துப் பிசைந்தால் மாவில் உள்ள ஈரம் உறிஞ்சப்பட்டு வடை மொறுமொறுப்பாக வரும்.

இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், கடைகளில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் சுவையான மற்றும் மொறுமொறுப்பான மசாலா வடையை, சிறிதும் எண்ணெய் உறிஞ்சாமல் உங்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
மசாலா வடை - Tea Kadai Vadai
logo
Kalki Online
kalkionline.com