நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!

பலாப்பழம் மற்றும் ராகி சேர்த்து மணக்க மணக்க அடை தயாரிப்பது எப்படி?
அடை வகைகள்
அடை வகைகள்AI image
Updated on

பாரம்பரிய அடை வகைகள் செய்யும் முறை மற்றும் நன்மைகள்

1. பலாப்பழம் இலை அடை

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 6

அரிசி மாவு – 1 கப்

வெல்லம் – ¾ கப்

தேங்காய் துருவல் – ½ கப்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

வாழை இலை – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பலாப்பழம், வெல்லப்பாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். அதில் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடர்த்தியான மாவாக கலக்கவும்.

வாழை இலையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டவும். இலை மீது மாவை பரப்பி மடித்து அடை வடிவில் செய்யவும். ஆவியில் 10–12 நிமிடம் வேகவைக்கவும்.வாழை இலையின் மணத்துடன் மென்மையான பலாப்பழம் இலை அடை தயார்.

2. தஞ்சாவூர் ஒரப்பு அடை

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - ஒரு கப்

பச்சரிசி - ஒரு கப்

கடலைப்பருப்பு - ஒரு கப்

துவரம் பருப்பு - ஒரு கப்

உளுந்து பருப்பு - ஒரு கப்

சின்ன வெங்காயம் - கால் கப் (நறுக்கியது)

காய்ந்த மிளகாய் - 6

சோம்பு - ஒரு ஸ்பூன்

சுரைக்காய் துருவல் - கால் கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

மஞ்சள் தூள்-சிறிதளவு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை-சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

அடை வகைகள்
அடை வகைகள்AI image

செய்முறை:

இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு சேர்த்து ஐந்து மணிநேரம் ஊறவைத்து அதனுடன், காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக தோசை மாவு பதத்தில் இருந்து கொஞ்சம் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

பின், அரைத்த மாவுடன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், துருவிய சுரைக்காய், துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின்னர், கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள மாவை தேவைக்கேற்ப அளவில் ஊற்றி வேகவைக்கவும். சுவையான காரசாரமான தஞ்சாவூர் ஒரப்பு அடை தயார் ‌அடை தயார்.

3. ராகி வாழைப்பழ அடை

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - ஒரு கப்,

வெல்லம் - முக்கால் கப்,

தேங்காய்த் துருவல் - கால் கப்,

கனிந்த செவ்வாழைப் பழம் - 1

நெய் - தேவையான அளவு.

செய்முறை:

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் ராகி மாவு, சவ்வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான, சத்தான ராகி வாழைப்பழ அடை ரெடி.

4. சிறுதானிய அடை

தேவையான பொருட்கள்:

தினை – 1/2 கப்

சாமை – 1/2 கப்

குதிரைவாலி – 1/2 கப்

வரகரிசி – 1/2 கப்

துவரம் பருப்பு – 1 கப்

கடலை பருப்பு – 1 கப்

உளுந்து – 1 ஸ்பூன்

பாசிப் பருப்பு – 2 ஸ்பூன்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் வற்றல் – 5

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

சோம்பு – 1/4 ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கருவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்க உதவும் அருமையான 5 வாழைத்தண்டு ரெசிபிகள்!
அடை வகைகள்

செய்முறை:

அனைத்து சிறுதானிய அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாக சேர்த்து, தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்த கலவையுடன் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாகக்கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி, அடையாக வார்த்து, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிடவும். சுவையான, மொறுமொறுப்பான, சத்தான சிறுதானிய அடை தயார்!

5. மிளகு அடை

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்

பச்சரிசி - 1/2 கப்

கருப்பு உளுந்து (உடைத்தது) - 1/4 கப்

மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1கப்

கறிவேப்பிலை - 20 இலைகள்

தேங்காய்த் துருவல் - 1 கப்

தேங்காய் எண்ணெய்,

உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
பொட்டுக்கடலையில் இவ்வளவு சுவையான உணவுகளா? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!
அடை வகைகள்

செய்முறை:

இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பை அளந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து கழுவிக்கொண்டு, 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸி ஜாரில் வடிகட்டிய அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். மேலும் 1.5 கப் தண்ணீர் விட்டு கலக்கவும். அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைக் கல்லை சூடாக்கவும். நன்கு சூடானதும், ஒன்றரை கரண்டி மாவை எடுத்து அடைகளாக வார்க்கவும். தேங்காய் எண்ணெயை சுற்றி விடவும். அடை பொன்னிறமாக மாறியதும் திருப்பிப் போட்டு 1 நிமிடம் நன்கு முறுகியதும் எடுக்கவும். சிவப்பு தேங்காய் சட்னியோடு சூடாக பரிமாற, சுவை அள்ளும்.

சர்க்கரை நோய் மற்றும் ஆரோக்கியம் குறித்த கவலைகளின்றி, இயற்கையான இனிப்புச் சுவையைக் கொண்ட பாரம்பரிய பலகாரங்களை உங்கள் வீட்டில் செய்து மகிழலாம்.

logo
Kalki Online
kalkionline.com