சட்டுனு 2 நிமிஷத்துல டேஸ்ட்டியான டீ! கிச்சன்ல கால் கடுக்க நிக்கவே வேண்டாம்!

Tea Making
Tea Making
Published on

நம்ம ஊர்ல பலருக்கும் டீங்கிறது ஒரு பானம் மட்டுமல்ல, அது ஒரு ஃபீலிங்! காலையிலயும், சாயங்காலமும் சூடா ஒரு டீ கிடைச்சா, அந்த நாளே நல்லா போகும். ஆனா, தினமும் கிச்சன்ல நின்னு டீ போடுறதுன்னா பலருக்குப் பெரிய அலுப்பாக இருக்கும். பாலை ஊத்து, டீ தூள் போடு, பொங்காம பார்த்துக்கோன்னு ஒரு பெரிய வேலையாக இருக்கும். 

பேச்சுலர்ஸ்களுக்கோ, புதுசா சமைக்கிறவங்களுக்கோ டீ போடுவதுன்னாலே ஒரு டென்ஷன்தான். இனிமேல் அந்தக் கஷ்டம் எல்லாம் இல்லை. ஒரு சின்ன பிரஷர் குக்கர் இருந்தாப் போதும். ஹோட்டல் தரத்துல, மணமான டீயை ரெண்டே நிமிஷத்துல சட்டுனு போட்டு குடிக்கலாம். அது எப்படின்னு பார்ப்போமா.

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

முதல்ல தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து வெச்சுக்கோங்க. ஒரு ரெண்டு கப் டீ போடப் போறோம்னா, அதுக்குத் தேவையான பால், முக்கால் கப் தண்ணி, ஒன்றரை ஸ்பூன் டீ தூள், ரெண்டு அல்லது மூணு ஸ்பூன் சீனி, அப்புறம் சுவைக்காக ஒரு துண்டு இஞ்சி, ஒரு ஏலக்காய் போதும். நீங்க வேணும்னா வாசனைக்காகக் கொஞ்சமா பட்டை அல்லது கிராம்பு கூடச் சேர்த்துக்கலாம்.

டீ போடுறதுக்குன்னு பெரிய குக்கர் எல்லாம் தேவையில்லை; சின்ன குக்கரே போதும்.

  1. முதல்ல, குக்கரை அடுப்புல வச்சு, அதுல தண்ணீரை ஊத்துங்க.

  2. அடுத்து, சர்க்கரை, டீ தூள், தட்டி வெச்சிருக்கிற இஞ்சி, ஏலக்காய் எல்லாத்தையும் ஒண்ணாச் சேருங்க.

  3. கடைசியில பாலை ஊத்துங்க.

  4. இப்போ குக்கரோட மூடியைப் போட்டு, விசில் போட்டு மூடிடுங்க. அடுப்பை ரொம்பவும் ஃபுல் தீயில் வைக்காம, மிதமான தீயில் வெச்சுக்கணும்.

இதையும் படியுங்கள்:
பிரஷர் குக்கர் Vs மல்டி குக்கர் - எது பெஸ்ட்?
Tea Making

ரெண்டு விசில் ரகசியம்!

இதுதான் டீ போடுறதுல இருக்குற முக்கியமான ரகசியம். நீங்க கரெக்டா இரண்டு விசில் வரும் வரை காத்திருக்கணும். முதல் விசில் வரும்போதே குக்கர்ல இருந்து டீயோட வாசனை கமகமன்னு வெளிய வர ஆரம்பிக்கும். ரெண்டாவது விசில் வந்ததும் அடுப்பை அணைச்சிடுங்க.

ரெண்டு விசிலுக்கு மேல வைக்கவே கூடாது. மூணாவது விசில் வரைக்கும் வெச்சா, டீ ரொம்ப ஸ்ட்ராங் ஆகி, லேசா கசப்புத் தன்மை வந்துடும்.

டீ ரெடியானதும், அவசரப்பட்டு குக்கர் மூடியைத் திறக்கக் கூடாது. கொஞ்ச நேரம் அப்படியே விட்டுடுங்க. உள்ளே இருக்கிற காத்து மெதுவா ரிலீஸ் ஆகி, விசில் சத்தம் முழுசா நின்னதும் மூடியைத் திறக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குக்கர் விசில் வரலையா?... 2 நிமிஷத்துல சரி பண்ண ஒரு சூப்பர் டிப்ஸ்!
Tea Making

குக்கர் டீ ஏன் சூப்பரா இருக்கு?

சாதாரண பாத்திரத்துல டீ போடும்போது, அது கொதிக்கும்போது எல்லா மணமும், சுவையும் ஆவியாகிக் காத்துல கலந்துடும். ஆனா, குக்கர்ல போடும்போது, உள்ள இருக்கிற பிரஷர் காரணமா டீ, மசாலா எல்லாம் சேர்ந்து நல்லா கொதிக்கும். அந்தச் சுவையும், மணமும் ஆவியாகாமல் டீக்குள்ளேயே அடங்கிவிடும். அதனாலதான் இந்த டீ சும்மா வேற லெவல் டேஸ்ட்டா, ஸ்ட்ராங்கா இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com