பிரியாணிக்கு பிரட் அல்வா எவ்வளவு ஸ்பெஷலோ அதே மாதிரி தஞ்சாவூர் பக்கம் பந்தியிலே பரிமாறுகிற பிரியாணிக்கு தக்காளி ஜாம் ரொம்ப ஸ்பெஷல். இதன் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் ரொம்ப அட்டாகாசமான இருக்கும். சரி வாங்க, இன்னைக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் தக்காளி ஜாமை வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி- ½ கிலோ.
நெய்- தேவையான அளவு.
முந்திரி-10
சக்கரை-1 கப்.
உப்பு- 1 சிட்டிகை.
ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்:
முதலில் ½ கிலோ தக்காளியை நன்றாக கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேகவிட்டால், தக்காளியின் தோல்கள் வெடித்து நன்றாக வெந்திருக்கும். அதை சற்று நேரம் ஆறவிட்ட பின் தக்காளியின் தோல்களை உரித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஃபேன் வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே ஃபேனிலேயே அரைத்த தக்காளியை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்து வரும் போது 1 கப் சக்கரை சேர்த்து நன்றாக கின்டவும். இப்போது சற்று கெட்டியானதும் 1 சிட்டிகை உப்பு, 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கின்டவும். பிறகு நெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கின்டிக்கொண்டே வந்தால், கடைசியாக நன்றாக தொக்கு பதத்திற்கு வந்துவிடும், நிறமும் நன்றாக மாறியிருக்கும். இப்போது அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கின்டி இறக்கவும். அவ்வளவுதான் அல்டிமேட்டான தஞ்சாவூர் ஸ்பெஷல் தக்காளி ஜாம் தயார்.