விதவிதமான ருசியில் தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை!

தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படைImage credit - youtube.com

ஞ்சாவூரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய ஒரப்படையை விதவிதமான ருசி கிடைக்க ஒருமுறை பரங்கி பிஞ்சு, மறுமுறை சுரைக்காய், அடுத்த முறை மரவள்ளி கிழங்கு என சேர்த்து செய்ய மிகவும் அருமையான ருசி கிடைக்கும்.  ஒரப்பரையை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

பச்சரிசி ஒரு கப் 

இட்லி அரிசி ஒரு கப் 

கருப்பு உளுந்து ஒரு கப் கடலைப்பருப்பு ஒரு கப் 

துவரம் பருப்பு ஒரு கப் 

காய்ந்த மிளகாய் 10 

உப்பு தேவையானது 

இஞ்சி ஒரு துண்டு 

பெருங்காயம் அரை ஸ்பூன் கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி சிறிது 

சின்ன வெங்காயம் 20 

தேங்காய் துருவல் அரை கப் 

சோம்பு ஒரு ஸ்பூன் 

பரங்கி பிஞ்சு 1 கப்

பச்சரிசி இட்லி அரிசி இரண்டையும் 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும் கருப்பு உளுந்து கடலை பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றை தனியாக கல்வி மூன்று மணி நேரம் ஊற விடவும் இவை அனைத்தையும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, சோம்பு ஆகியவற்றை போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து மாவில் கலக்கவும். அத்துடன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய பிஞ்சு பரங்கி காயை சேர்த்து நான்கு கலக்கி விட அடை மாவு தயார்.

இப்பொழுது அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் அடை மாவை ஊற்றி அதனைச் சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு புறமும் நன்கு பொன் கலரில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். மிகவும் ருசியான தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை தயார்.

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த உறக்கத்தின்போது நம் உடலில் நடப்பது என்ன?
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை

இந்த ஒரப்படைக்கு விதவிதமான ருசி கிடைக்க ஒரு முறை பரங்கி பிஞ்சு, மறுமுறை சுரைக்காய் அடுத்த முறை மரவள்ளிக் கிழங்கு என சேர்த்து செய்யலாம். இந்த மாதிரி பாரம்பரிய உணவுகளை மறக்காமல் மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள வெண்ணை, நாட்டுச்சக்கரை, அவியல், பச்சை மிளகாய் காரசட்னி தோதாக இருக்கும்.

ஆந்திரா ஸ்பெஷல் காந்தல் பொடி!

துவரம் பருப்பு 1/2 கப் 

உளுத்தம் பருப்பு 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப்

காய்ந்த மிளகாய் 10 

பூண்டு பல் 6 

சீரகம் 1/2 ஸ்பூன் 

கருவேப்பிலை சிறிது 

உப்பு 

நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

காந்தல் பொடி...
காந்தல் பொடி...Image credit - youtube.com

ஒரு வாணலியில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்து எடுக்க மிகவும் ருசியான ஆந்திரா ஸ்பெஷல் காந்தல்பொடி ரெடி.

இதனை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com