உடம்பை ஏத்தும் 20 கில்லாடி உணவுகள்!

Foods
Foods
Published on

நம்முடைய அன்றாட வாழ்க்கையில, நாம சாப்பிடற உணவு வெறும் பசி அடக்குறதுக்கு மட்டும் இல்ல. உடலுக்குத் தேவையான எனர்ஜியையும், ஊட்டச்சத்தையும் தர்றதுதான். ஆனா, இந்த எனர்ஜிங்கறது, எந்த அளவுக்கு இருக்குங்கறத நாம எப்பவும் கவனிக்கிறது இல்லை. குறிப்பா, கலோரிகள்… 

கலோரின்னா, நம்ம உடலுக்கு சக்தி தர்ற ஒரு அளவீடுன்னு சொல்லலாம். சில உணவுகள்ல கலோரி ரொம்ப அதிகமா இருக்கும். அது, சரியான அளவுல சாப்பிட்டா நல்லது. ஆனா, அளவு கடந்தா, உடம்புல தேவையற்ற கொழுப்பு சேர்ந்து, பல பிரச்னைகளை உண்டாக்கும். அதனால, எந்த உணவுகள்ல அதிக கலோரிகள் இருக்குன்னு தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியம்.

கலோரி அதிகமுள்ள 20 உணவுகள்:

  1. நட்ஸ் மற்றும் நட்ஸ் பட்டர்ஸ் (Nuts & Nut Butters): பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகள்ல ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைஞ்சிருக்கும். ஆனா, இதுல கலோரிகளும் ரொம்ப அதிகம். ஒரு கைப்பிடி நட்ஸ்லேயே நிறைய கலோரிகள் இருக்கும். அதே மாதிரி, பீநட் பட்டர்ல இன்னும் அதிகம்.

  2. சீஸ் (Cheese): சீஸ் பல உணவுகளுக்கு ஒரு தனி டேஸ்ட்டை கொடுக்கும். ஆனா, இதுல கொழுப்பும், கலோரியும் நிறைய இருக்கும். முக்கியமா ஃபுல் ஃபேட் சீஸ் வகையறாக்கள்.

  3. அவோகாடோ (Avocado): இது ஒரு சூப்பர்ஃபுட். உடம்புக்கு ரொம்ப நல்லது. ஆனா, இதுல கொழுப்பு அதிகமா இருக்கறதால, கலோரிகளும் அதிகம்.

  4. டார்க் சாக்லேட் (Dark Chocolate): டார்க் சாக்லேட்ல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய இருக்கும். ஆனா, இதுவும் கலோரி அதிகமுள்ள ஒரு உணவுதான்.

  5. பன்றி இறைச்சி (Pork Belly): பன்றி இறைச்சியில அதிகமான கொழுப்பு பகுதி இருக்கறதால, இதுல கலோரிகள் ரொம்ப அதிகம்.

  6. கிரனோலா (Granola): இது பாக்க ஆரோக்கியமான உணவு மாதிரி தெரியும். ஆனா, இதுல சேர்க்கப்படற சர்க்கரை, தேன், நட்ஸ் மற்றும் எண்ணெய்னால கலோரிகள் ரொம்ப அதிகமா இருக்கும்.

  7. தேங்காய் எண்ணெய் (Coconut Oil): ஆரோக்கியமான எண்ணெய்தான். ஆனா, மத்த எண்ணெய்களை விட இதுல கலோரிகள் அதிகம்.

  8. சோயா பீன் (Soybean): இதுல புரோட்டீன் அதிகம். ஆனா, கலோரிகளும் அதிகம்.

  9. பர்கர் (Burger): பர்கர் பேட்டிகள், சீஸ் மற்றும் சாஸ்களால் கலோரிகள் ரொம்ப அதிகம்.

  10. பிஸ்ஸா (Pizza): பிஸ்ஸாவுல சீஸ், மாவு, டாப்ஸிங் எல்லாமே கலோரி அதிகமா உள்ள பொருட்கள் தான்.

  11. மயோனைஸ் (Mayonnaise): இது ஒரு சாஸ். ஆனா, இதுல எண்ணெய் அதிகம் இருக்கறதால கலோரிகளும் அதிகம்.

  12. ஃப்ரைடு சிக்கன் (Fried Chicken): எண்ணெயில் பொரிக்கப்பட்ட சிக்கன்ல கொழுப்பும், கலோரிகளும் ஏராளம்.

  13. சர்க்கரை மிட்டாய் (Candy): இதுல வெறும் கலோரிகள் மட்டும் தான் இருக்குமே தவிர, எந்தவித ஊட்டச்சத்தும் இருக்காது.

  14. பார்பிக்யூ சாஸ் (Barbecue Sauce): இந்த சாஸ்ல சர்க்கரை நிறைய இருக்கறதால கலோரிகளும் அதிகம்.

  15. பொட்டேட்டோ சிப்ஸ் (Potato Chips): உருளைக்கிழங்கு சிப்ஸும் கலோரி அதிகமுள்ள ஒரு ஸ்நாக்ஸ்.

  16. ஐஸ்க்ரீம் (Ice Cream): ஐஸ்க்ரீம்ல சர்க்கரை, பால் மற்றும் க்ரீம் இருக்கறதால கலோரிகள் ரொம்ப அதிகம்.

  17. ஹெவி கிரீம் (Heavy Cream): இது காபி, டீல சேர்க்கப்படறது. இதுல கொழுப்பு ரொம்ப அதிகம்.

  18. கார்ன் சிப்ஸ் (Corn Chips): மக்காச்சோள சிப்ஸும் கலோரிகள் அதிகம் உள்ள ஒரு உணவு.

  19. பட்டர் (Butter): வெண்ணெய்ல கொழுப்பு அதிகமா இருக்கறதால கலோரிகள் ரொம்ப அதிகம்.

  20. பொரித்த உணவுகள் (Fried Foods): எண்ணெயில் பொரித்த பெரும்பாலான உணவுகள்ல கலோரிகள் அதிகம்.

இதையும் படியுங்கள்:
sin goods என்றால் என்ன? அதற்கு ஏன் அதிக 40% வரி விதிப்பு...!
Foods

அதிக கலோரி கொண்ட உணவுகள்னால, உடம்புக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். ஆனா, அதை அளவு மீறி சாப்பிட்டா, உடம்புல கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரை வியாதி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அதனால, கலோரி அதிகமா உள்ள உணவுகளை சாப்பிடறதால தவறில்லை. ஆனா, அதை சரியான அளவுல, நம் உடல் இயக்கத்துக்கு ஏத்த மாதிரி எடுத்துக்கணும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com