
பிரான்சில் உள்ள அர்ஜென்டியூவில் (Argenteuil (Val-d'Oise) வால்-டி-ஓய்ஸ் நகரில் உள்ள பேக்கரிக்கடை ஒன்று உலகின் மிக நீளமான ஸ்ட்ராபெரி கேக் ஒன்றை தயாரித்து அன்மையில் உலக சாதனை படைத்துள்ளது.
121 மீட்டர் நீளமுடைய ஸ்ட்ராபெர்ரி கேக் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கினை தயாரிக்க 350 கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ,150 கிலோ சீனியும், 415 பேஸ்ட்டி கிரீம் மற்றும் 4,000 முட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1.2 டன் (121.88 கி.கிராம்) எடையுள்ளது இந்த இராட்சத ஸ்ட்ராபெர்ரி கேக். இந்த சுவையிலான கேக் ஒன்று இத்தனை பெரிதாக தயாரிக்கப்படுவது உலகில் இதுவே முதன்முறை.
"ஸ்ட்ராபெரி கேக் ஒரு உன்னதமானது, பண்டிகை நாட்களில் ,குடும்ப விழாக்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த கேக் சுமார் 1.2 டன் எடை கொண்டது, 350 கிலோ எடையுள்ள ஸ்ட்ராபெர்ரிகளுடன் தயாரிக்கப்பட்டது" என்று மைசன் ஹெலோயிஸ் பேக்கரி கடையின் மேலாளரும் சாதனையாளரான யூசெப் எல் கட்டோ கூறியுள்ளார்.
இந்த கேக்கினை கின்னஸ் அதிகாரிகள் பார்வையிட்டு இந்த சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தோடு அர்ஜென்டியூவில் நகர மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுக்கு ஒரு துண்டு கேக் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
1.2 டன் எடையுள்ள இந்த ஸ்ட்ராபெரி கேக்கை யூசெப் எல் கட்டோ என்பவர் 20 சமையல்காரர்களை ஒன்றிணைத்து உருவாக்கினார். இதை செய்து முடிக்க ஒரு வாரம் எடுத்துகொள்ளப்பட்டது. பாரிஸ் புறநகர் நகரமான அர்ஜென்டீயுலில் உள்ள ஒரு வரவேற்பு அறையில் மேசைகளில் வைக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் ஆய்வு செய்வதற்காக காட்சிப் படுத்தப்பட்டது.
இந்த முயற்சி 2019 ஆம் ஆண்டில் இத்தாலிய நகரமான சான் மௌரோ டோரினீஸில் தயாரிக்கப்பட்ட 100.48 மீ (329 அடி 7 அங்குலம்) நீளமுள்ள ஸ்ட்ராபெரி கேக்கின் சாதனையை முறியடித்தது. பிரெஞ்சு பேஸ்ட்ரி சமையல்காரர்கள் 121.8 மீட்டர் (399 அடி, எட்டு அங்குலம்) நீளமுள்ள ஸ்ட்ராபெரி கேக்கை தயாரித்தனர், இதுதான் உலகின் மிக நீளமான ஸ்ட்ராபெரி கேக் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
"கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைக்க, கேக் குறைந்தது எட்டு சென்டிமீட்டர் அகலமும் எட்டு சென்டிமீட்டர் உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். சமையல் தளவாடங்கள் மிகவும் குறைவாக இருந்ததால், கிரீம் கலவையை தயாரிக்க குழு "கிண்ணத்தை சூடாக்க ஊதுகுழல்களைப் பயன்படுத்தியது" என்று சமையல்காரரின் மனைவி நதியா எல் கட்டோ குறிப்பிட்டுள்ளார். எல் கட்டோ, சிறுவயதிலிருந்தே ஒரு சாதனை படைக்க விரும்புவதாகக் கூறி வந்துள்ளார். அதற்கு வாய்ப்பாக இந்த கேக் செய்யும் பனி அவருக்கு கிடைத்தது.
கின்னஸ் உலக சாதனைகளுக்கான நடுவரான அனூக் டி டிமாரி, இந்த சாதனையை சரிபார்க்க தேவையான அளவுகோல்கள் குறித்து. அவர் கூறுகையில், "இந்த ஸ்ட்ராபெரி கேக் பாரம்பரிய ஸ்ட்ராபெரி கேக் செய்முறைபடி உள்ளது, இது கிரீம், ஸ்ட்ராபெரி மற்றும் ஒரு குக்கீயால் ஆனது.
கேக் ஒரே மாதிரியாக இருக்கிறதா என்பதையும், உலகின் மிக நீளமான ஸ்ட்ராபெரி கேக்கை உருவாக்க ஒன்றாக இணைக்கப்பட்ட வெவ்வேறு கேக்குகளுக்கு இடையில் எந்தப் பிரிப்பும் உள்ளதா என்பதையும் நான் சரிபார்த்தேன், நான் கேக்கைப் பார்க்கும்போது, அதில் எந்தப் பிரிப்பும் இல்லை." என்று கூறியுள்ளார்.