சமையலுக்கு புதுசா? பூசணி விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியை எறியாதீர்கள்...

Cooking Tips
Cooking
Published on
  • பூசணியை சமைக்கும்போது, விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியை தூக்கி எறிந்துவிடாமல், அதை தோசைக்கு அரைக்கும் மாவுடன் சேர்த்து அரைத்தால் மிருதுவான தோசை கிடைக்கும்.

  • முருங்கைக்கீரையை சமைக்கும்போது, சிறிதளவு சர்க்கரை கலந்து சமைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

  • இட்லி மாவில் வாழை இலையின் நடுப்பகுதி துண்டைப் போட்டு வைத்தால் மாவு புளிக்காது. இட்லி மாவின் மேல் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினாலும் மாவு புளிக்காது.

  • பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

  • தேங்காயை தண்ணீரில் நனைத்து பின்னர் உடைத்தால் சரிபாதியாக உடையும்..

  • இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகி விட்டால், அதனுடன், ஊற வைத்த ரவை சிறிது சேர்த்து விட்டால், இட்லி மிருதுவாகவும், ரவா இட்லி போலவும் இருக்கும்.

  • சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

  • கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.

  • சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

  • வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

  • தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

  • காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

  • நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

  • சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

  • கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

  • எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

  • தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

  • அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியை தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.

  • பால் காய்ச்சும் போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும். மணமாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சமையலில் அசத்தலாம் வாங்க! - சமையல் குறிப்புகள் சில!
Cooking Tips

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com