ஹோட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா?

Poori
Poori
Published on
  • கோதுமை, மைதா மாவில் பூரி செய்யும் போது சிறிது அவித்த உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து செய்தால் பூரி சுவையாக இருக்கும்.

  • பூரி மாவுடன் கொஞ்சம் துருவிய தேங்காய் சேர்த்து பூரி செய்தால் பூரி புதுமையான சுவையுடன் இருக்கும்.

  • கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.

  • ஹோட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோயா மாவு, அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமுத்தும் போகாது.

  • இரண்டு தக்காளிப் பழங்களை தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து அடித்து, கால் கிலோ கோதுமை மாவு, உப்பு, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால், பூரி நல்ல கலருடன் உப்பலாக பொரிந்து மிகவும் சுவையாக இருக்கும்.

  • பூரிக்கு மாவு பிசையும் போது அத்துடன் சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் பூரியின் சுவையே அலாதி தான்.

  • பூரிக்கு மாவு பிசையும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் ரவையையும், ஒரு டீஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக வரும்.

  • பூரிக்கு தொட்டுக்கொள்ள கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருட்களுடன் பொட்டுக்கடலை பொடியை சிறிதளவு சேர்த்தால் மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.

  • பூரி உப்பலாக அமுங்காமல் அப்படியே இருக்க வேண்டுமானால், கோதுமை மாவுடன் கார்ன்ஃப்ளார், ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து வழக்கம் போல கெட்டியாக பிசைய வேண்டும்.

  • இஞ்சியையும், பச்சை மிளகாயையும் அரைத்து மோரில் சேர்த்து, அதை பயன் படுத்தி பூரிக்கு மாவு பிசைந்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான பூரி கிடைக்கும்.

  • நான்கு பிரட் துண்டுகளை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் மிருதுவான பூரி தயார்.

இதையும் படியுங்கள்:
சீசனுக்கேற்ற மாம்பழ பூரி - உடனடி மாங்கா பிரட்டல் செய்யலாம் வாங்க!
Poori

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com