உங்கள் சமையலை எளிதாக்க: தெரிந்துகொள்ள வேண்டிய வீட்டுக்குறிப்புகள்!

Cooking tips in tamil
To make your cooking easier
Published on

ருப்புப்பொடிக்கு அரைக்கும்போது வறுத்த துவரம்பருப்புடன் ஒரு  கைப்பிடி பொட்டுக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையாக  இருக்கும்.

கேக்கில் முட்டை சேர்த்து செய்யும்போது முட்டை வாடை அடிக்கும். கேக் மாவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துச் செய்தால் வாடை இருக்காது.

பயறுவகைகளை ஊறவைக்கும்போது தண்ணீர் வழுவழுப்புத்தன்மை அடையும் முன்பே நீரை வடித்து  விட்டால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.

வெங்காயம் நறுக்கும் முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண் எரிச்சல் ஏற்படாது.

கேக் தயாரிக்கும்போது பிஸ்கட், பிஸ்தாவை அப்படியே கேக்கின் மீது பதிக்காமல் பாலில் நனைத்துத் தூவினால் உதிராமல் கேக் மீது ஒட்டிக்கொள்ளும்.

பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால் தோலை எளிதில் உரிக்கலாம்.

அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டு வைத்தால் சாதம் பொலபொலவென்றும், வெண்மையாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உடம்புக்கு இதம்... வாய்க்கு ருசி!மழைக் கால ஜுரத்தை விரட்டும் 3 'ஜோர்' ரசங்கள்!
Cooking tips in tamil

ஓவனில் அசைவம் சமைத்தால் அதன் வாடை போகாது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு துளிகள் ரோஸ் எசென்ஸ் விட்டு, ஓவனில் இளம் சூட்டில் வைத்து, சிறிது நேரம் கழித்து சுவிட்ச் ஆஃப் செய்தால் வாடை அறவே நீங்கிவிடும்.

தேங்காய்பர்பி  செய்யும்போது, துருவிய தேங்காயை அப்படியே சர்க்கரை பாகில் கொட்டாமல், தேங்காய்த்துருவலுடன் அரை டம்ளர் பால், ஐந்து முந்திரி சேர்த்து  மிக்ஸியில் அரைத்த பிறகு, சர்க்கரை  பாகில் சேர்த்தால் பர்பி  மிருதுவாக  இருக்கும்.

பச்சை நிறக் காய்கறிகளின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா? அவற்றை சமைக்கும்போது ஒரு  ஸ்பூன் சர்க்கரையை சேர்த்தால் போதும்.

ஊறுகாயில் பூஞ்சை படர்வதை தடுக்க எண்ணையை நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய பின்  ஊறுகாயில் ஊற்றவேண்டும்.

காலிஃப்ளவர் சமைக்கும் போது அதனுடன் கொஞ்சம் பால் பவுடர் சேர்த்து சமைத்தால்  வெண்மை  நிறம் மாறாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com