
ரவா தோசை செய்யும்போது, ரவையை நன்றாக வறுத்துப் பிறகு ஊறவைத்து சிறிது மைதாமாவுடன் கலந்து மற்றப் பொருட்களையும் சேர்த்து தோசை வார்த்தால் பட்டுப் போல எடுக்கவரும்.
பருப்புப்பொடி அரைக்கும்போது இரண்டு தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும்.
பால் புளிக்காமல் இருக்க ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். இவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
பிரட் பக்கோடா செய்வதற்கு முன், வெட்டி வைத்திருக்கும் ரொட்டித்துண்டுகளை பாலில் நனைத்து எடுத்து பக்கோடா மாவில் கலந்து போட்டால் சுவையாக இருக்கும்.
பாகற்காய் கூட்டு, குழம்பு செய்யும்போது அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்துக் கொண்டால் கசப்பு நீங்கிவிடும்.
சாம்பார் செய்ய துவரம் பருப்பை மட்டும் பயன்படுத்தாமல் சம அளவு பாசிப்பருப்பை சேர்த்து பயன்படுத்தினால் சாம்பார் சுவையாக இருக்கும்.
உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று இருக்கும்.
கேசரி, பால்கோவா, தேங்காய் பார்பி போன்ற இனிப்புகள் நான்_ ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.
ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊறவைத்து சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித்துண்டுகள் சேர்த்துக்கொண்டால் ஊறுகாய் ருசியாக இருக்கும்.
கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புக்கு பதில் வேர்கடலையை வறுத்துப்போட்டால் துவையல் டேஸ்ட்டாக இருக்கும்.