அதிக புரதம் நிறைந்த டாப் 5 பழங்கள் இவைதான்! 

Fruits Rich in Protein
Fruits Rich in Protein
Published on

புரதச்சத்து நிறைந்த உணவுகள் என்று வரும்போது அதில் யாருக்குமே பழங்கள் முதலில் நினைவுக்கு வராது. இருப்பினும் சில பழங்களில் குறிப்பிடத்தக்க புரதங்கள் உள்ளன. உங்கள் உணவில் அந்த பழங்களை சேர்ப்பதால் ஓரளவுக்கு உங்களது புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த பதிவில் அதிக புரதச்சத்து நிறைந்த சில பழ வகைகள் பற்றி பார்க்கலாம். 

  1. கொய்யா: கொய்யா ஒரு வெப்பமண்டல பழமாகும். இது புரதத்தின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பிரபலமானது. ஒரு கப் கொய்யாப்பழத்தில் சுமார் 2.6 கிராம் புரதச்சத்து உள்ளது. மேலும் கொய்யாவில் அத்தியாவசிய மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற அனைத்தும் நிறைந்துள்ளன. 

  2. அவகாடோ: அவகாடோ ஆரோக்கியமான கொழுப்புகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் இதிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. ஒரு நடுத்தர அளவிலான அவகாடோ பழத்தில் சுமார் 4 கிராம் புரதச்சத்து உள்ளது.‌ மேலும் இதில் மோனோசெச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் இருப்பதால், இது அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு அற்புதப் பழமாகும். 

  3. பிளாக்பெர்ரி: பிளாக்பெர்ரி பழம் சுவையானது மட்டுமல்ல போதுமான அளவு புரதச்சத்தையும் கொண்டுள்ளது. ஒரு கப் பிளாக்பெர்ரி பழத்தில் சுமார் 2 கிராம் புரதம் உள்ளது. கூடுதலாக இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி, கே ஆகியவை நிறைந்துள்ளன. 

  4. கிவி: கிவி என்பது புரதச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சிறிய பழமாகும். ஒரு நடுத்தர அளவிலான கிவி பழத்தில் 1 கிராம் புரதச்சத்து உள்ளது. மேலும் கிவி பழம் விட்டமின் சி, விட்டமின் கே, நார்ச்சத்து போன்றவற்றிற்கும் பிரபலமானது. 

  5. பலாப்பழம்: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் ஒரு தனித்துவமான சுவை மற்றும் அமைப்புடன் இருக்கும் ஒரு பழமாகும். இதில் நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒரு கப் பலாப்பழத்தில் சுமார் 2.8 கிராம் புரதச்சத்து உள்ளது. மேலும் பலாப்பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் பிற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்களும் அடங்கியுள்ளன. 

இதையும் படியுங்கள்:
வரும் ஜூன் 3 அன்று நிகழ இருக்கும் கோள்களின் பவனி பற்றித் தெரியுமா?
Fruits Rich in Protein

இந்த 5 பழங்களில் புரதச்சத்து இருந்தாலும் இறைச்சி, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள் போன்ற பிற புரத மூலங்களுடன் ஒப்பிடுகையில் அவற்றின் புரத உள்ளடக்கம் மிகவும் குறைவாகவே இருப்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இருப்பினும் ஏதோ ஒரு பழத்தை சாப்பிடுவதற்கு பதிலாக புரதச்சத்து நிறைந்த இத்தகைய பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது கூடுதல் ஊட்டச்சத்துகளுக்கு உதவியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com