South Indian Thali: வாழை இலையில் ஒளிந்திருக்கும் அறிவியல் - தாலியின் ஆரோக்கிய நன்மைகள்!

South Indian Thali
South Indian Thali
Published on

உணவுகளுக்கு இந்தியாவில் பல்வேறு இடங்களும் நகரங்களும் பிரபலமாக இருந்தாலும், தென்னிந்திய உணவுகளுக்கு என்றுமே ஒரு சிறப்பு இருந்தே வருகிறது. அப்படி பார்க்கும்போது தென்னிந்திய தாலி உணவுகளுக்கும் தனித்துவமான சிறப்புகள் இருக்கின்றன. தாலி என்று அழைக்கப்படும் அறுசுவை உணவுகள் தென்னிந்திய கலாச்சாரத்திலும் சரி, தமிழர்களின் கலாச்சாரத்திலும் சரி ஒரு முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய தென்னிந்திய தாலி என்றால் என்ன? (What is a traditional South Indian Thali?)

பாரம்பரிய தென்னிந்திய தாலி என்பது, பலவகையான கூட்டுகள், பொரியல்கள், அதோடு சேர்ந்த சாதம், சாம்பார், குழம்பு, ரசம், மோர், அப்பளம், பாயாசம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் அடங்கிய ஓர் உணவு பட்டியலே தாலி ஆகும். இந்த தாலி உணவுகள் தென்னிந்தியாவில் பாரம்பரிய விசேஷ நாட்களிலும், வழக்கமான நாட்களிலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு வகையாகும். தென்னிந்திய கலாச்சாரத்தில் இந்த தாலி உணவானது விருந்தோம்பலில் ஒரு முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது. திருவிழா, திருமணம், சுப நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் இந்த தாலி உணவு முறையானது பரிமாறப்படுகின்றன.

தென்னிந்திய தாலியின் பல்வேறு கூறுகள் (The different components of South Indian Thali):

முதன்மையாக சாதம் இடம்பெறுகின்றன. ஒரு சில இடங்களில் புலாவ் என்று மாறுபடுகின்றன.

குழம்பு வகைகள்: பருப்பு காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சாம்பார், வத்தக் குழம்பு, புளிக்குழம்பு, ரசம், மோர், சில சமயம் காய்கறி குழம்பு என்று பரிமாறப்படும்.

கூட்டுகள்/பொரியல்கள்: உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, பீர்க்கங்காய், அப்பளம், கீரை மசியல், கீரை பொரியல் போன்றவைகள் பக்க உணவுகளாக பரிமாறப்படுகின்றன. அதேபோல் ஊறுகாய் (மாங்காய், பூண்டு, தக்காளி போன்ற) வகைகளும் வைக்கப்படுகின்றன.

இனிப்பு உணவுகள்: வாழை இலையில் முதலாவதாக லட்டு, பூந்தி, மைசூர் பாக், குலாப் ஜாமுன் ஏதாவது ஒன்று வைக்கப்படுகின்றன. இறுதியில் சாப்பிட்டு முடித்தப்பின், பாயாசம் வைக்கப்படுகின்றன.

பழங்கள்: பெரும்பாலும் வாழைப்பழம் கட்டாயமாக வைக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் மாதுளம் பழம், திராட்சை, பேரிச்சம்பழம் பழம் வைக்கப்படுகின்றன.

அலங்காரம் மற்றும் பரிமாறுதல்: முறையாக இனிப்பில் தொடங்கி ஒவ்வொரு உணவாக முறையாக பரிமாறப்படும். ஒவ்வொரு வகை உணவுகளும் தனித்தனியாக இடம் பெறும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என்று அறுசுவையும் உணவு பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.

சமச்சீரான தென்னிந்திய தாலியின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits of a balanced South Indian Thali):

தென்னிந்திய தாலியில் உள்ள உணவுகள் ஒவ்வொன்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.

புரதச்சத்துக்கள்: சாம்பாரில் இருக்கும் காய்கறிகள் பருப்புகள் போன்றவற்றிலிருந்தும், வடை கூட்டுப் பொரியல் போன்றவற்றில் இருந்தும் கிடைக்கின்றன.

நார்ச்சத்துக்கள்: கூட்டு, பொரியல், அவியல், கீரை பொரியல் போன்ற பக்க உணவுகளில் இருந்து நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றன.

சமநிலையான சுவைகள்: ஆறு சுவைகளும் சமநிலையாக இருப்பதால் நன்கு விரும்பி உண்ணப்படுகின்றன. அதேபோல் ஜீரண சக்தியும் மேம்படுகின்றன.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: காய்கறி, பருப்பு, கீரை போன்றவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. அதேபோல் இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் இருதயத்திற்கும் பாதுகாப்பு ஏற்படுகின்றன.

ஆற்றல் மற்றும் நீண்ட நேர பசியடக்கம்: உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அமினோ அமிலங்கள் ஆகியவை உடலுக்கு ஆற்றலையும் நீண்ட நேர பசி எடுப்பதையும் குறைக்கிறது.

வைட்டமின்கள் & கனிமசத்துக்கள்: கீரை காய்கறி பழங்களில் வைட்டமின் ஏ, கே,சி, இரும்புச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், கால்சியம் போன்றவைகள் அடங்கியுள்ளன. அதேபோல் தயிர், மோரில் உடலுக்கு நன்மை தரக்கூடிய தேவையான புரோபயாட்டிக் பாக்டீரியாக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய சுவை: மேத்திக்கீரை பூரி மற்றும் ஸஃபேத் எல்ச்சி அல்வா!
South Indian Thali

தென்னிந்திய தாலியின் பிராந்திய வகைகள் (Regional variation of the South Indian Thali)

தமிழ்நாடு தாலி: வாழை இலையில் பரிமாறப்படும். சாதம், சாம்பார், கூட்டு, ரசம், மோர், வத்த குழம்பு, பொரியல், பாயாசம், அப்பளம் போன்றவைகள் அடங்கும். திருமண நிகழ்ச்சிகளில் பொதுவாக 25 முதல் 30 வகையான உணவு பட்டியல்கள் இருக்கும்.

கேரள தாலி: வாழை இலையில் பரிமாறப்படுகின்றன. சாதம், சாம்பார், அவியல், எருசேரி, பச்சடி, கிச்சடி, அட பிரதமன், பால் பாயாசம் போன்ற உணவுகள் அடங்கும். பெரும்பாலும் உணவுகளை தயாரிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவார்கள்.

ஆந்திர தாலி: மிகவும் காரமாக இருக்கும். புளியோதரை, பருப்பு சோறு, காய்கறி கூட்டு, காங்குரா பச்சடி, மாங்காய் ஊறுகாய், பூர்ணம் போளி, பாயாசம் போன்ற உணவுகள் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
ஊட்டச்சத்து நிறைந்த முள்ளங்கி - 4 சுவையான ரெசிபிகள்!
South Indian Thali

தெலுங்கானா தாலி: மிகவும் புளிப்பும் உரப்பும் இருக்கும். சோளம் ரொட்டி, சாதம், சாம்பார். பெரும்பாலும் சிறுதானியங்கள் உணவுகளில் சேர்க்கப்படும்.

கர்நாடக தாலி: பிஸ்மில்லா பாத், பருப்பு சாலட், கூட்டு, பொரியல், ரசம், மோர், ஊறுகாய்கள் இனிப்புக்காக மைசூர் பாக், பாயாசம் போன்ற உணவுகள் அடங்கும்.

வெளிநாட்டு உணவுகளுக்கு முன், நம் தென்னிந்திய தாலி உணவுகள் ஆரோக்கியத்திலும் சரி சுவையிலும் சரி எவ்வளவோ மேலானது என்பது குறிப்பிடத்தக்கது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com