
வாழைக்காய் வடை
தேவை:
வாழைக்காய் - 4
சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
பூ ண்டு - 15 பல் (நறுக்கியது)
கடலை மாவு - 4 டீஸ்பூ ன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூ ன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள் (நறுக்கியது)
கொத்தமல்லி இலை - 1 கப் (நறுக்கியது)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி, அதில் வாழைக்காயின் இரு முனைகளையும் நறுக்கி, அதன்மீது நீளவாக்கில் இரண்டு கோடுகளை போட்டு வேகவைக்கவும். வாழைக்காய் வெந்ததும் தோலை நீக்கி வாழைக்காயை மாவு பதத்திற்கு பிசைந்து, அதனுடன் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோம்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உள்ளங்கைகளில் வைத்து வடைபோல தட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு வேகவைத்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் வடை தயார்.
*****
துவரைக்காய் வடை
தேவை:
பச்சைத் துவரைக்காய் – 200 கிராம், (தோல் உரித்து எடுக்கவும்),
கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – தலா ஒரு கப்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2,
அவல் – ஒரு கப் (ஊற வைக்கவும்),
எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரைக்காயுடன் பச்சை மிளகாய், அவல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். மாவுடன் துருவிய கேரட், வாழைத்தண்டு, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து… எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப்போட்டு பொரித்தெடுக்கவும். சூப்பர் சுவையில் துவரைக்காய் வடை தயார்.
****
முள்ளங்கி வடை.
தேவை:
முள்ளங்கி (துருவியது) - 1 கப்
முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
புதினா (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 6
சீரகம், சோம்பு - தலா 1 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 25 கிராம்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முள்ளங்கியை, நன்றாக தோல் சீவி துருவி அதில் உள்ள நீரை நன்றாக பிழிந்து எடுத்துவிடவும். சிறிது நேரம் அதை உலர வைக்கவும். கீரை, புதினா,பச்சை மிளகாய் இவற்றை மிகவும் மெலிதாக அரிந்து கொள்ளவும். வேர்க்கடலையை மிக்சியில் ஒரு சுற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, முள்ளங்கி, அரிந்து வைத்த கீரை, புதினா, பச்சை மிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். கலக்கும் முன் சீரகம், சோம்பு இவற்றை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து இத்துடன் கலக்கவும். இத்துடன் வேர்க்கடலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன். ஓமம் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும், கலவையை ஒரு பிடி கையில் எடுத்து பார்த்தால் அது உதிராமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும், உதிர்ந்தால் இன்னும் சிறிது மாவு சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
உருண்டைகளை ஒவ்வொன்றாக கையில் எடுத்து, சிறிது தட்டையாக்கி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மொறு மொறு முள்ளங்கி வடை தயார்.
*****
பீட்ரூட் வடை
தேவை:
பீட்ரூட் துருவல் - 1 கப்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன், மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப்போட்டு, பொரித்தெடுத்தால் சுவையான பீட்ரூட் வடை தயார்.