லேஸ், குர்குரே இல்லாத காலத்துல நம்ம தாத்தா பாட்டி ட்ரெயின்ல என்ன ஸ்நாக்ஸ் கொண்டு போனாங்கனு தெரியுமா?

traditional-indian-travel-snacks
traditional-indian-travel-snacks
Published on

இன்றைய காலகட்டத்தில் நாம் ஏதாவது ஒரு லாங் ஜர்னி போகிறோம் என்றால், முதலில் கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்ஸ் நிரம்பிய சிப்ஸ் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளைத்தான் வாங்குகிறோம். ஆனால் இதெல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, எந்த ஒரு பேக்கேஜ்டு ஸ்நாக்ஸ் வசதியும் இல்லாத காலத்தில் நமது முன்னோர்கள் பல நாட்கள் ரயிலிலும் வண்டியிலும் பயணம் செய்திருக்கிறார்கள். 

அப்போதெல்லாம் வழியில் எந்த ஒரு ஃபுட் டெலிவரி ஆப்ஸும் கிடையாது. ஆனாலும் அவர்கள் கெட்டுப்போகாத, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து கொண்டு சென்றார்கள். அப்படி அவர்கள் பயணங்களின் போது என்னென்ன எடுத்துச் சென்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

1. புளியோதரை: தென்னிந்தியர்களின் பயணங்களில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பது புளியோதரைதான். புளி ஒரு இயற்கையான பிரிசர்வேட்டிவ் ஆக செயல்படுவதால், இது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. இதை ஒரு வாழை இலையில் கட்டி எடுத்துச் சென்றால், மறுநாள் சாப்பிடும் போது அதன் டேஸ்ட் பல மடங்கு சூப்பராக இருக்கும்.

2. இட்லி மிளகாய் பொடி: வெறும் இட்லியும் சட்னியும் எடுத்துச் சென்றால் சீக்கிரமே கெட்டுப் போய்விடும் அல்லது காய்ந்து போய்விடும். இதற்கு ஒரு சூப்பரான ஆல்டர்நேட்டிவ் ஆக அவர்கள் பொடி இட்லியை உருவாக்கினார்கள். நல்லெண்ணெய் மற்றும் காரமான மிளகாய் பொடியில் புரட்டி எடுக்கப்பட்ட இட்லிகள் பல மணி நேரங்கள் வரை மிக சாஃப்ட்டாக இருப்பதோடு, பயணத்தின் போது சாப்பிடுவதற்கு மிகவும் பாதுகாப்பான ஒரு உணவாக இருந்தது.

3. சப்பாத்தி, ஊறுகாய்: வட இந்தியாவில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் சப்பாத்தி அல்லது தேப்லா போன்றவற்றைத்தான் பேக் செய்வார்கள். தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயில் சுடப்பட்ட இந்த சப்பாத்திகளை, காரசாரமான மாங்காய் ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிடுவது ஒரு அல்டிமேட் காம்போ. இதுவும் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

4. முறுக்கு, தட்டை: வழியில் கொறிப்பதற்கு இப்போது நாம் கடைகளில் வாங்கும் நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக, வீடுகளிலேயே சுத்தமான எண்ணெயில் செய்யப்பட்ட முறுக்கு மற்றும் தட்டைகளை எடுத்துச் சென்றார்கள். இது எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமான ஒரு மொறுமொறுப்பான ஸ்நாக் ஆக நீண்ட தூர பயணங்களுக்கு உதவியது.

இதையும் படியுங்கள்:
சூப்பரா ருசிக்க சுக்கு வரகு தீபாவளி அதிரசம்!
traditional-indian-travel-snacks

5. அதிரசம், லட்டு: காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் இனிப்பு சாப்பிட வேண்டும் போலத் தோன்றும் அல்லவா. அதற்காக குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் வெளியே வைத்தாலும் கெட்டுப்போகாத அதிரசம் மற்றும் கடலை மாவு லட்டுகளை அவர்கள் டப்பாக்களில் அடைத்து எடுத்துச் சென்றார்கள். இது பயணத்தின் போது நல்ல ஒரு எனர்ஜி கொடுத்தது.

6. வறுத்த வேர்க்கடலை, பொரி: ரயில் ஜன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி டைம்பாஸ் செய்வதற்கு வறுத்த வேர்க்கடலையும் பொரியும்தான் அன்றைய ஃபேவரைட். எடையிலும் மிகவும் குறைவு, அதே சமயம் உடலுக்கும் மிகவும் நல்லது என்பதால் இதை ஒரு பெரிய துணிப்பையில் கட்டி எடுத்துச் செல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? படிக்கும் ரகசியம் இங்கே!
traditional-indian-travel-snacks

இதைப் படிக்கும் போதே பலருக்கும் தங்களது பழைய ஸ்கூல் ட்ரிப், குடும்பத்துடன் ஊருக்குச் சென்ற நினைவுகள் வந்திருக்கும். இன்று நாம் மாடர்ன் உலகத்தில் பல வகையான பேக்கேஜ்டு உணவுகளை சாப்பிட்டாலும், நமது வீடுகளில் செய்யப்படும் இந்த பாரம்பரிய உணவுகளின் ஃப்ளேவர் மற்றும் ஆரோக்கியத்திற்கு எதுவுமே ஈடாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com