நெய் மணக்கும் செட்டிநாடு சுவை: ஆரோக்கியமான 'கருப்பட்டி பணியாரம்' செய்வது எப்படி?

karupatti-paniyaram-recipe
karupatti-paniyaram-recipe
Updated on

ணியாரம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவு. பாரம்பரியமான முறையில் கருப்பட்டியில் பணியாரம் செய்யும்போது அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை காட்டிலும் கருப்பட்டி ஒரு ஆரோக்கியமான இனிப்பு வகையாகும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம் இரும்புச்சத்தை தருகிறது. கருப்பட்டியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தி மூட்டு வலி உள்ளவர்களுக்கும் சிறந்த நிவாரணமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

கருப்பட்டி சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தை தூண்டி கல்லீரலில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பலப்படுத்துகிறது. உடலுக்கு உடனடியான ஆற்றலை வழங்குகிறது. பெண்கள் கருப்பட்டி சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமானதாகவும், குழந்தை பிறப்பின்போது தாய்ப்பால் சுரப்பதற்கு இது உதவுகிறது. ஆரோக்கியமான பாரம்பரிய முறையில் கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 250 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

உளுந்து - 150 கிராம்

கருப்பட்டி - 250 கிராம்

ஏலக்காய் பொடி - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை நான்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அரிசி நன்கு ஊறியவுடன் கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். உளுந்தை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்து நன்கு ஊறியவுடன் மையாக அரைத்து அரிசி அரைத்ததுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படியுங்கள்:
சமையல் கலையில் அசத்தலாம் வாங்க! உங்கள் கிச்சனை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்!
karupatti-paniyaram-recipe

ஒரு வாணலியில் கருப்பட்டியை தேவையான அளவு நீர் ஊற்றி பாகாக காய்ச்சிக் வடிகட்டி அரிசி கலவையுடன் சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். பணியாரப் பாத்திரத்தில் தேவையான அளவு நெய் ஊற்றி பணியார மாவை சேர்த்து இரண்டு புறமும் நன்கு சிவந்து வரும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். பணியாரம் நன்கு சிவந்து வந்திருந்தாலே அதிக சுவையுடன் இருக்கும்.

கருப்பட்டி நெய் மணக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய கருப்பட்டி பணியாரம் தயார். கடைகளில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதை காட்டிலும் நாம் வீட்டிலேயே பாரம்பரியமான முறையில் செய்து கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com