வீட்டிலேயே செய்யலாம் விதவிதமான ரெசிபிகள்: ஸ்ரீகண்ட் மற்றும் கோலா உருண்டை செய்முறை!

shrikhand-kola-urundai
shrikhand-kola-urundai
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

ட்ரை கலர் ஸ்ரீகண்ட்

ஆரஞ்சு கலர்

தேவை --

நல்ல தயிர் 1/2 கப்

சீனி(பொடித்தது) 1 டேபிள்

ஸ்பூன்

குங்குமப்பூ 1/2 சிட்டிகை

ஏலப்பொடி 1/2 சிட்டிகை

ஒரு வாயகன்ற ஃபௌலில், தயிரை விட்டு, குங்குமப்பூ, பொடித்த சீனி, ஏலப்பொடி போட்டு மிக்ஸ் செய்து வைக்கவும்.

(வெள்ளை கலர்)

தேவை -

நல்ல தயிர் 1/2 கப்

பொடித்த சீனி 1 டேபிள்

ஸ்பூன்

ஏலப்பொடி 1/2 சிட்டிகை

மேற் கூறிய மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு மிக்ஸ் செய்து, க்ரீமியாக வரும் வரை நன்கு கலந்துகொள்ளவும்.

(பச்சை கலர்)

தேவை -

நல்ல தயிர் 1/2 கப்

சீனி (பொடித்தது) 1 டேபிள்

ஸ்பூன்

பிஸ்தாப்பருப்பு

(பொடித்தது) 1 டே. ஸ்பூன்

க்ரீன் ஃபுட் கலர் 1/4 சிட்டிகை

கிண்ணமொன்றில், மேற்கூறிய பொருட்களைப் போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும். இப்போது தனித்தனியாக மூவகை கலர் ரெடி.

முதலில், சின்ன - சின்ன கிண்ணங்களில், பிஸ்தா -பச்சைக் கலர் கலவையை கொஞ்சம் போட்டு, அதன்மீது வெள்ளை கலர் க்ரீமியைப் போடவும்.

இதன் மேல், குங்குமப்பூ கலந்த ஆரஞ்சு கலவையைப் போட்டு, மேலாக, பிஸ்தா மற்றும் பாதாம் பொடிகளால் அலங்கரித்து, ஃப்ரிட்ஜினுள் சுமார் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும் இந்த ட்ரை கலர் ஸ்ரீகண்ட். பூரி மற்றும் சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
பீட்ரூட் கட்லெட் மற்றும் கோல்ட் காபி செய்வது எப்படி? - எளிய செய்முறை விளக்கம்!
shrikhand-kola-urundai

துவரம் பருப்பு கோலா உருண்டை

தேவை:

நல்ல துவரம் பருப்பு 200 கிராம்

வெங்காயம் 2

(தோல் சீவி பொடியாக

அரிந்து கொள்ளவும்)

தேங்காய்த் துருவல் 1 கப்

காய்ந்த மிளகாய் வற்றல் 5

சீரகம் 1 டீஸ்பூன்

மிளகு 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை கொஞ்சம்

.ரீஃபைன்டு ஆயில் 1/4 லிட்டர்

உப்பு தேவையானது

தண்ணீர் தேவையானது

செய்முறை:

முதலில், துவரம்பருப்பை தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

பின்னர் சீரகம், தேங்காய்த்துருவல், பெருஞ்சீரகம், மிளகாய் வற்றல், மிளகு, கருகப்பிலை ஆகியவைகளை மிக்ஸியில் இட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

மேலே கூறிய இரண்டையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தயாராக வைத்திருக்கும் உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து சாப்பிடுகையில், கம-கம மணத்துடன் செம டேஸ்ட்டாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com