பீட்ரூட் கட்லெட் மற்றும் கோல்ட் காபி செய்வது எப்படி? - எளிய செய்முறை விளக்கம்!

healthy-evening-snacks
healthy-evening-snacks
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

பொதுவாக மாலை நேரத்தில் டீ அல்லது சூடான காபி குடிக்க விரும்புவோம். சற்று மாற்றாக உணவகங் களுக்குச் சென்று அருந்தும் அதே சுவையில் ஒரு “க்ரீமி கோல்ட் காபி”யும், அதற்கு இணையாக ஆரோக்கியம் நிறைந்த “பீட்ரூட் கட்லெட்”டும் வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும்? குறைந்த நேரத்தில், எளிய பொருட்களைக் கொண்டு உங்கள் குடும்பத்தினரை அசத்த உதவும் இந்த இரண்டு செய்முறைகளையும் பார்ப்போம்.

க்ரீமி ஹோம்மேட் கோல்ட் காபி

தேவையான பொருட்கள்:

காய்ச்சி ஆறவைத்த பால்_ 2 கப் (நன்கு குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்)

இன்ஸ்டன்ட் காபி தூள்_ 2 தேக்கரண்டி

சர்க்கரை_ 3 முதல் 4 தேக்கரண்டி

வெதுவெதுப்பான நீர்_ 1 மேசைக்கரண்டி

ஐஸ் கட்டிகள்_ 4 – 5

சாக்லேட் சிரப்_ அலங்காரத்திற்கு

செய்முறை: ஒரு சிறிய கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் இந்தக் காபி கரைசல், குளிர்ந்த பால் மற்றும் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். மிக்ஸியை 1 முதல் 2 நிமிடங்கள் வரை நன்கு அடித்தால், மேலே தாராளமாக நுரை வரும். கண்ணாடி டம்ளரின் ஓரங்களில் சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்து, பின் தயார் செய்த காபியை ஊற்றவும். மேலே எஞ்சியுள்ள நுரையைச் சேர்த்து அதன் மேல் லேசாக காபி தூள் தூவி பரிமாறவும்.

சுவையான பீட்ரூட் கட்லெட்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட்_ 2 (துருவியது)

உருளைக்கிழங்கு_ 2 (வேகவைத்து மசித்தது)

பெரிய வெங்காயம்_ 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய்_ 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது_ 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்_ 1 தேக்கரண்டி

கரம்மசாலா_ அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள்_ கால் தேக்கரண்டி

உப்பு_ தேவையான அளவு

சோள மாவு _ 2 மேசைக்கரண்டி (சிறிது தண்ணீர் கலந்து கரைத்துக் கொள்ளவும்)

பிரெட் தூள் _ அரை கப்

எண்ணெய்_ பொரிக்க தேவையான அளவு

செய்முறை: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும் (அதிலுள்ள ஈரப்பதம் போகும் வரை). இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இப்போது மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மல்லித்தழை தூவி ஆறவிடவும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால ஸ்பெஷல்: இந்திய மாநிலங்களின் 8 வகை மாங்காய் ரெசிபிகள்!
healthy-evening-snacks

இந்த கலவையைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு கட்லெட்டையும் சோள மாவு கரைசலில் நனைத்து, பின் பிரெட் தூளில் போட்டு உருட்டி எடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, தயார் செய்த கட்லெட்டுகளை வைத்து மிதமான தீயால் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.

பீட்ரூட் கட்லெட்டை தக்காளி கெட்ச்அப் உடன் சேர்த்துச் சாப்பிட்டால் மிக அற்புதமாக இருக்கும்!

வண்ணமயமான பீட்ரூட் கட்லெட் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதோடு, குழந்தை களுக்கும் மிகவும் பிடிக்கும். அதேபோல், வெயிலின் தாகத்தைத் தணித்து புத்துணர்ச்சி அளிக்க இந்த ஹோம்மேட் கோல்ட் காபி ஒரு சிறந்த தேர்வாகும். கடைகளில் வாங்கும் துரித உணவுகளைத் தவிர்த்து, சுத்தமான முறையில் வீட்டிலேயே இத்தகைய சிற்றுண்டிகளைச் செய்து மகிழுங்கள். இந்த “காம்போ” உங்கள் மாலை நேரத்தை நிச்சயம் மகிழ்ச்சியாக மாற்றும்.

logo
Kalki Online
kalkionline.com