
கொளுத்தும் வெயிலுக்கு கூல் தரும் ஜூஸ் வகைகளைத்தான் முதலில் நாம் தேடுவோம். அதில் எப்போது முதலில் இருப்பது இளநீர்தான். இயற்கை அமுதமான இளநீரில் உள்ள சத்துக்கள் கோடையில் ஏற்படும் நீரிழப்பை சமன் செய்யும் என்பதால் தினமும் இளநீர் அருந்துவது நல்லது. மேலும் சிறுநீர் பிரச்னைகளையும் நீக்கும் அருமருந்தான இளநீருடன் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் சேர்த்து இங்கு சூப்பர் சுவை கொண்ட ஜூஸ் வகைகளை காணலாம்.
இளநீர் பப்பாயா ஜூஸ்
தேவை:
இளநீர் -3 கப்
இளநீர் வழுக்கை - 2 கப்
பப்பாளி பழம் - 1 கப் ( தோல் சீவி நறுக்கியது)
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் நன்கு மைய அடித்து பிறகு இளநீர் வழுக்கை சேர்த்து நைசாக அடித்து கடைசியாக எடுத்து வைத்துள்ள இளநீரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அனைத்தையும் ஒன்றாக கலந்து ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறலாம் தேவைப்பட்டால் சிறிது நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம், மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஜீஸ் இது.
இளநீர் வித் அன்னாசி ஜூஸ்
தேவை:
இளநீர்- 2 கப்
இளநீர் வழுக்கை - 1 கப்
அன்னாசித் துண்டுகள் - 2 கப்
சர்க்கரை சிரப் - நான்கு டேபிள் ஸ்பூன்
உப்பு- சிட்டிகை ,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
இளநீர் வழுக்கை, அன்னாசித் துண்டுகள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அடித்துக்கொள்ளவும் அதில் இளநீர் மற்றும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும். இதை டமளர்களில் ஊற்றி ஐஸ் கட்டிகளை சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
இளநீர் ப்ரூட் ஜூஸ்
தேவை:
(தோல் சீவி நறுக்கிய) கோசா பழத்துண்டுகள் -2 கப்
முலாம்பழத் துண்டுகள் - 1 கப்
ஆரஞ்சு சுளை - 1 கப்
இளநீர் - 2 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
கருப்பு உப்பு - 1) 2டீஸ்பூன்
புதினா இலைகள் - சிறிது
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
கோசாப்பழத்துண்டுகள் மற்றும் முலாம் பழத்துண்டுகளை மிக்சியில் அடித்து அத்துடன் இளநீர் நாட்டுச் சர்க்கரை கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து டம்ளர்களில் ஊற்றவும். ஆரஞ்சு சுளைகளை தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து வடிகட்டி அந்த ஜூசை ஐஸ் டீரேயில் ஊற்றி ஃப்ரீசரில் கட்டிகளாக உறைய வைத்து டம்ளரில் இருக்கும் ஜூஸில் சேர்த்து மேலே ஐஸ் கட்டி மற்றும் பொதினா இலைகளை மிதக்க விட்டு அருந்தினால் வெயில் தாகம் போயே போச்சு.
இளநீர் இஞ்சி பானம்
தேவை:
இளநீர் - 1 கப்
இளநீர் வழுக்கை - 1/2 கப்
எலுமிச்சை - அரை மூடி
இஞ்சி - சிறு துண்டு
கட்டிக்கல்கண்டு - 1 சிறிய கப்
செய்முறை:
இளநீருடன் வழுக்கை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து தோல் சீவித்துருவிய இஞ்சியும். பொடித்த கற்கண்டையும் சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் மூன்று மணிநேரம் வைக்கவும். பிறகு எடுத்து வடிகட்டி இஞ்சிச் சக்கை நீக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம். இந்த இளநீர் இஞ்சி பானம் வெயில் தாக்கத்திலிருந்து உடனடி விடுபட வைக்கும் ஒரு புத்துணர்வு பானம்.