வேற லெவல் சுவையில் உடுப்பி ரசம் - நுங்கு பாயா ரெசிபிஸ்!

Udupi Rasam-Nungu Paya Recipes
Udupi Rasam-Nungu Paya Recipes
Published on

ன்றைக்கு அல்டிமேட் டேஸ்டில் உடுப்பி ரசம் மற்றும் நுங்கு பாயா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

உடுப்பி ரசம் செய்ய தேவையான பொருட்கள்.

மசாலா செய்ய,

எண்ணெய்-1 தேக்கரண்டி

வெந்தயம்-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

தனியா-1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்-4

காருவேப்பிலை-சிறிதளவு

பெருங்காயத்தூள்-சிறிதளவு

கடுகு-1 தேக்கரண்டி

உளுந்து-1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்-2

தக்காளி-1

உப்பு-தேவையான அளவு

மஞ்சள் தூள்-1 சிட்டிகை

புளி-எழுமிச்சைப்பழ அளவு

துவரம் பருப்பு-1 கப்

வெல்லம்-சிறிதளவு

உடுப்பி ரசம் செய்முறை விளக்கம்:

முதலில் பேனில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெந்தயம் 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, தனியா 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து வறுத்துவிட்டு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து விட்டு தேவையான அளவு உப்பு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது தக்காளி வதங்கியதும் எழுமிச்சை அளவு புளியை ஊற வைத்து அந்த தண்ணீரும், வேக வைத்த துவரம் பருப்பு 1 கப்பும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்துவிடவும். ரசம் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்துவிட்டு கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிட்டால், உடுப்பி ரசம் தயார்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டி தக்காளி தொக்கு - காரசார நெல்லிக்காய் சட்னி - ரெசிபிஸ்!
Udupi Rasam-Nungu Paya Recipes

நுங்கு பாயா செய்ய தேவையான பொருட்கள்.

நுங்கு-1 கப்.

பட்டை-1

ஏலக்காய்-1

லவங்கம்-1

முந்திரி-10

சோம்பு-1 தேக்கரண்டி.

கசகசா-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2.

பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி.

தேங்காய்-2 கைப்பிடி.

பட்டை-1

லவங்கம்-1

ஏலக்காய்-2

வெங்காயம்-1

தக்காளி-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

நுங்கு பாயா செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பட்டை 1, ஏலக்காய் 1, லவங்கம் 1 சேர்த்து அதில் 1 கப் நுங்கை சேர்த்து 30 நிமிடம் வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் முந்திரி 10, சோம்பு 1 தேக்கரண்டி, கசகசா 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி, 2 கைப்பிடி தேங்காய் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
இந்த பழங்களை தோலுடன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Udupi Rasam-Nungu Paya Recipes

இப்போது பேனில் எண்ணெய் விட்டு பட்டை 1, ஏலக்காய் 2, லவங்கம் 1 சேர்த்து தாளித்துவிட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்ட்டை இதில் சேர்த்துக் கலந்துவிடவும்.

இதில் வேகவைத்த நுங்கை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்துவிடவும். தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கினால் சுவையான நுங்கு பாயா தயார். இதை இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com