வழக்கமான பாயசத்திற்கு குட்பை சொல்லுங்க: நாவில் எச்சில் ஊறவைக்கும் 3 புதுமையான பாயசம்!

Unique Payasam Recipes
Unique Payasam Recipes

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அத்திப்பழ பாயசம்

தேவை:

பசும் பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், தேன் - கால் கப், பொடியாக நறுக்கிய அத்திப்பழம் - அரை கப், பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு - கால் கப், ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஒரு கப் பசும் பாலில், பதப்படுத்திய அத்திப்பழத்தை, அரை மணி நேரம் ஊறவையுங்கள். அரை கப் கொதிக்கும் தண்ணீரில் பாதாமை 5 நிமிடம் ஊறவைத்து, தோல் நீக்குங்கள். மீதி உள்ள பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சுங்கள். பாதாமையும் அத்திப்பழத்தையும் (அத்திப்பழம் ஊறவைத்த பாலுடன் சேர்த்து) மிக்ஸியில் அரைத்தெடுங்கள்.

அரைத்த கலவையை, அடுப்பில் உள்ள பாலுடன் சேர்த்துக் காய்ச்சுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் காய்ந்ததும் இறக்கி, சிறிது ஆறியதும், தேன், ஏலக்காய்தூள், ஜாதிக்காய்தூள் சேர்த்துக் கலந்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கலக்கிப் பரிமாறுங்கள். வெகு சுவையாக இருக்கும் இந்தப் பாயசம்.

பச்சைப் பட்டாணி பாயசம்

தேவை:

பால் - 4 கப்,

ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - ஒரு கப்,

நெய் - 4 டீஸ்பூன்,

சர்க்கரை - ஒரு கப்,

பால்கோவா - கால் கப்,

பாதாம்பருப்பு (மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்தது) - ஒரு டீஸ்பூன்,

ஏலக்காய்தூள் - சிறிதளவு.

செய்முறை:

பாலில் சர்க்கரை சேர்த்து, அது முக்கால் பாகமாக (அதாவது 3 கப் அளவுக்கு) ஆகும் வரை காய்ச்சுங்கள். கோவாவை உதிர்த்து, அதில் சேருங்கள். மற்றொரு பாத்திரத்தில் பட்டாணியை (உப்பு சேர்க்காமல்) வேகவையுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, பட்டாணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுங்கள்.

அரைத்த விழுதை நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, சிறுதீயில் நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் இதை பாலுடன் சேருங்கள். அத்துடன் பாதாம், ஏலக்காய்தூள், பச்சை கலர் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிட்டு, குளிரவைத்துப் பரிமாறுங்கள். வித்தியாசமான சுவையில் பச்சை பட்டாணி பாயாசம் தயார்.

மாதுளை பாயாசம்

தேவை:

மாதுளை தானியம் – 1 கப்

பால் – ½ லிட்டர்

கருப்பட்டி – ½ கப்

பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன்

முந்திரி, பாதாம் – சிறிதளவு

ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
நாவூறும் நால்வகை அல்வா: ஆப்பிள், பீட்ரூட், மிக்ஸட் ஃப்ரூட்ஸ் அல்வா செய்வது எப்படி?
Unique Payasam Recipes

செய்முறை:

பாசிப்பருப்பை நன்றாக வறுத்து வேகவைத்து கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அதில் வேகவைத்த பாசிப்பருப்பு, கருப்பட்டி சேர்க்கவும். மிதமான தீயில் பால் கெட்டியாகும் வரை கிளறவும்.

ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்க்கவும். இறுதியில் மாதுளை தானியத்தைச் சேர்த்து மெதுவாக கிளறி இறக்கவும். இந்த பாயாசத்தை சூடாகவும், குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com