தினசரி உணவில் தவிர்க்க முடியாத குழம்பு வகைகள்!

Tamil food culture
Unmissable types of broth!
Published on

மிழ் உணவுக் கலாச்சாரத்தில் “குழம்பு” என்பது ஒரு முக்கியமான பகுதி. ஒவ்வொரு வீட்டிலும் தினமும் தயாரிக்கப்படும் இந்தக் குழம்பு வகைகள் சுவையிலும், ஆரோக்கியத்திலும் தனித்தன்மை பெற்றவை. மசாலா மணம், புளிப்புச்சுவை, காரசுவை ஆகியவை சேர்ந்து ஒரு அற்புதமான உணவு  பயணத்தை உருவாக்குகின்றன.

ஏழு வகையான குழம்புகளின் செய்முறைகள்

வெந்தயக் குழம்பு

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 tsp, புளி – சிறு எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 1 tbsp, மஞ்சள்தூள் – ¼ tsp, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 2 tbsp, கடுகு – ½ tsp.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் வறுக்கவும். புளியை நீரில் ஊறவைத்து சாறு எடுத்துகொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சாறு கனம் அடைந்ததும் அடுப்பை அணைக்கவும்.  சுவைமிகு வெந்தயக் குழம்பு தயார்.

தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்: தக்காளி – 3, வெங்காயம் – 1, பூண்டு – 4 பல், மிளகாய்த்தூள் – 1 tbsp, உப்பு, எண்ணெய்.

செய்முறை:  கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மசித்து வேகவைக்கவும்.  மிளகாய்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். புளிப்பு, காரம் கலந்த தக்காளிக் குழம்பு தயார்.

எண்ணை கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்: சிறிய கத்திரிக்காய் – 6, புளி – சிறு அளவு, மிளகாய்த்தூள் – 1 tbsp, வெங்காயம் – 1, கடுகு, வெந்தயம், உப்பு, எண்ணெய்.

செய்முறை: கத்திரிக்காயை இரண்டாக கீறி எண்ணெயில் வதக்கவும்.  புளிச்சாறு, மசாலா சேர்த்து காய்ச்சிவிடவும். எண்ணெய் மேலே மிதந்ததும் அடுப்பை அணைக்கவும். மணமிகு எண்ணை கத்திரிக்காய் குழம்பு தயார்.

இதையும் படியுங்கள்:
நலமான வாழ்விற்கு: இஞ்சி, துளசி முதல் வல்லாரை வரை... 7 ரெசிபிகள்!
Tamil food culture

பருப்பு குழம்பு (சாம்பார்)

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – ½ கப், புளி, சாம்பார் பொடி – 1 tbsp, காய்கறிகள் (முருங்கைக்காய், வெண்டை, கேரட்), உப்பு.

செய்முறை: பருப்பை குக்கரில் வேகவைக்கவும். காய்கறிகளை புளிச்சாறில் வேகவைக்கவும். இரண்டையும் சேர்த்து சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சுவை மிகுந்த பருப்பு சாம்பார் தயார்

வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்: சுண்டைக்காய் வத்தல் – 2 tbsp, புளி, மிளகாய்த்தூள் – 1 tbsp, வெந்தயம், கடுகு, உப்பு, எண்ணெய்.

செய்முறை: வத்தலை சிறிது எண்ணெயில் வறுக்கவும். புளிச்சாறு, மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கனம் வரும் வரை சமைக்கவும். நாளுக்கு நாள் சுவை அதிகரிக்கும் வத்தக் குழம்பு ரெடி.

தேங்காய்க் குழம்பு

தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – ½ கப், சீரகம் – 1 tsp, பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 1, உப்பு, எண்ணெய்.

செய்முறை: தேங்காய், சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்து விழுது எடுக்கவும். கடாயில் வெங்காயம் வதக்கி, அரைத்த விழுது சேர்க்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிடவும். மிருதுவான தேங்காய்க் குழம்பு தயார்.

இதையும் படியுங்கள்:
மட்சா டீ: கிரீன் டீயை விடச் சிறந்ததா? அதன் ஆரோக்கிய நன்மைகளும், சிறப்புகளும்!
Tamil food culture

முருங்கைக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் – 6 துண்டுகள், துவரம் பருப்பு – ½ கப், புளி, சாம்பார்பொடி, உப்பு.

செய்முறை: முருங்கைக்காயை வேகவைக்கவும். வேகவைத்த பருப்பு, புளிச்சாறு, சாம்பார் பொடி சேர்த்து கலக்கவும். கொதிக்கவிட்டு கனம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.  ஊட்டச்சத்து நிறைந்த முருங்கைக்காய் குழம்பு தயார்.

இந்த ஏழு குழம்புகளும் நமது தமிழர் சமையல் மரபின் சுவைமிகு அடையாளங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com