உங்கள் சமையலை ருசியாக்கும் சூப்பர் சீக்ரெட்ஸ்!

cooking
cooking
Published on
  • பருப்பு ரசம் வெரைட்டியான ருசியில் வேண்டுமா? 2 பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி ரசம் ரசம் பொங்கி வரும் போது போடுங்கள். 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கினால் ரசம் சுவையாக மணக்கும்.

  • தேங்காய் உடைத்த நீரை வீணாக்காமல் ரசம் வைக்கும் போது அதில் தேங்காய் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் வித்தியாசமான ருசியாக இருக்கும்.

  • அரைத்து விட்ட சாம்பாரில் வழக்கமாக அரைக்கும் பொருட்களுடன் சிறிது கசகசாவையும் சேர்த்து அரைத்து செய்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

  • இட்லிப் பொடிக்கு சாமான்களைப் போட்டு வறுக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லியையும் சேர்த்து வறுத்தால் இட்லிப் பொடி வாசனையாக இருக்கும்.

  • தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும் தேங்காய் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து அதில் கொட்டினால் வாசனையும் சுவையும் தூக்கலாக இருக்கும்.

  • பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் ஆறிய பாலை சேர்த்து மாவு பிசைந்து பூரி போட்டால், ருசியாக இருப்பதோடு பூரி மிருதுவாகவும் இருக்கும்.

  • தோசைக்கு மாவு ஊற வைக்கும்போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் தோசை முறுகலாக வருவதோடு மொறுமொறு எனவும் ருசியாகவும் இருக்கும்.

  • வெங்காய பக்கோடா செய்வதற்கு மாவு பிசையும் போது வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்ந்து பிசைந்து பக்கோடா போட்டால் பக்கோடா மொறு மொறுவென ருசியாக இருக்கும்.

  • தக்காளி குருமா செய்யும் போது சிறிது சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதில் ஊற்றி குருமா செய்தால் வாசனையுடன் சுவையாக இருக்கும்.

  • எந்த வகை சூப்பா இருந்தாலும் அதனுடன் இட்லியை சிறு சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்து போட்டால் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

  • பாயாசத்தில் திராட்சைக்குப் பதில் பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அறுசுவையில் காரச்சுவையின் அற்புதமான குணங்கள் பற்றி அறிவோமா?
cooking
  • சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரைத்த தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி இறக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

  • கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் குழம்பு வைக்கும் போது சிறிது கடுகு, வெற்றிலை வெறும் வாணலில் வறுத்து தூளாக்கி கொதிக்கும் குழம்பில் போட்டு கலக்கி இறக்கினால் குழம்பு மிக மனமாகவும் சுவையுடனும் இருக்கும்.

  • உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த ஒரு உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென ருசியாக இருக்கும்.

  • எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம் செய்யும் போது கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையே ஒன்றும் இரண்டுமாக பொடி செய்து போட்டால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

  • எந்தவித பாயாசமாக இருந்தாலும் அதில் ஒரு கரண்டி வெந்த பயத்தம் பருப்பை கலந்து சேர்த்துவிட்டால் பாயாசத்தின் சுவை பிரமாதமாக இருக்கும்.

  • உளுந்த வடைக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு துவரம் பருப்பை ஊறவைத்து சேர்த்து அரைத்து செய்தால் வடை ருசியாக இருக்கும்.

  • குழந்தைகள் சாதாரணமாக வெஜிடபிள் சூப் குடிக்க மறுப்பார்கள். அப்போது துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவி தந்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • மோர் குழம்பு மீதமாய் விட்டதா? சிறிது கடலைமாவை சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து குழம்போடு சேர்க்கவும் அருமையான ருசியில் இருக்கும்.

  • ஒரு கப் ஓட்சுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு சேர்த்து தேவையான உப்பு போட்டு குக்கரில் வேகவிட்டு, இதில் மிளகு சீரகம் முந்திரி நெய்யில் தாளித்து போட்டால் ருசியான மணமான ஓட்ஸ் பொங்கல் ரெடி.

  • மதியம் செய்த காய்கறி பொறியல் மீந்துவிட்டால் அதை அப்படியே சப்பாத்தியில் வைத்து உருட்டியோ, தோசையில் வைத்து மடித்தோ ஸ்டப்டு சப்பாத்தி, ஸ்டப்டு தோசை செய்யலாம். ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ருசியான இனிப்பு பணியாரம் வகைகள்!
cooking

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com