சர்க்கரை, சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா? வாழைப்பூ, வாழைத்தண்டு ரெசிபி!

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, சிறுநீரகக் கற்களை கரைக்கும் எளிய வாழைப்பூ சாதம், வாழைத்தண்டு சாம்பார் செய்முறை.
வாழைப்பூ சாதம்
வாழைப்பூ சாதம்Gemini image
Updated on

1. வாழைப்பூ சாதம்

வாழைப்பூவில் அதிக அளவு உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்பு தன்மை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக அளவு ரத்தப்போக்கை குறைக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட வாழைப்பூவைக் பயன்படுத்தி வாழைப்பூ சாதம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி - 400 கிராம்

வாழைப்பூ - 300 கிராம்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

வர வத்தல் - 3

வெங்காயம் - 1

தக்காளி - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

மல்லித்தூள் - தேவையான அளவு

கரம் மசாலா - தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து கடுகு நன்கு பொறிந்த உடன் உளுந்து, சீரகம், வரவத்தல், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இடித்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

வாழைப்பூ சாதம்
வாழைப்பூ சாதம்Gemini image

இவற்றுடன் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து தேவையான அளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு டிரையாகும் வரை வதக்கிகொள்ள வேண்டும். இறுதியாக வடித்து வைத்திருந்த சாதம் சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவேண்டும்.

இதன் மேல் தேவையான அளவு மல்லித்தழை, சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறலாம். சுவையான கமகமக்கும் ஒரு புதுவிதமான டேஸ்ட்டில் வாழைப்பூ சாதம் தயார். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
வாழைப்பூ சாதம்

2. வாழைத்தண்டு சாம்பார்

வாழைத்தண்டு அதிக அளவு சிறுநீரகத்தில் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் சிறுநீர் வழியாகவே வெளியேற்ற பெரியது உதவுகிறது.

இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இது செரிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. சுவையான வாழைத்தண்டு சாம்பார் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 100 கிராம்

வாழைத்தண்டு - 100 கிராம்

கடுகு - 1 ஸ்பூன்

தக்காளி - 2

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - தேவையான அளவு

மல்லித்தூள் - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

வாழைத்தண்டை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி, இதனுடன் பாசிப்பருப்பு நன்கு கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு தேவையான அளவு நீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

இதையும் படியுங்கள்:
3 மாதம் வரை கெடாத சாம்பார் பொடி! வறுக்கும் பதம் மற்றும் அரைக்கும் முறைகள்!
வாழைப்பூ சாதம்

குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் இதனை ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்கு மசித்து கொடுக்க வேண்டும் தாளிப்பிற்காக ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொறிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும். இறுதியாக மல்லித்தழை தூவி இறக்க வேண்டும் சுவையான கமகமக்கும் வாழைத்தண்டு சாம்பார் தயார்.

வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டைப் பயன்படுத்தி சுவையான உணவுகளைத் தயாரிப்பதோடு, ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் உதவும் எளிய ஆரோக்கியச் சமையல் முறையை வாசகர்கள் கற்றுக்கொள்வர்.

logo
Kalki Online
kalkionline.com