
இரண்டு வாழைப்பழம், சிறிது சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு எஸன்ஸ் ஊற்றினால் புதுமையான சுவையான பாயசம் ரெடி.
பாயசம் செய்வதற்கு வெறும் வாணலியில் ஜவ்வரிசியை வறுத்து சூடாக்கிய பிறகு வேக வைத்தால் வேகும்போது ஜவ்வரிசி ஒன்றோடோன்று ஒட்டிக் கொள்ளாமல் சுதந்திரமாக விரைவில் வெந்து விடும். பாயசத்தின் சுவையும் நன்றாக இருக்கும்.
பாயசம் நீர்த்து விட்டால் அதனுடன் வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்தால் பாயசம் கெட்டியாகிவிடும்.
இரண்டு முந்திரிப்பருப்பு, கொஞ்சம் கச கசாவை அம்மியில் அரைத்துக்கடலை மாவு சேர்த்துக் கொதிக்கவிடவும். சாதத்தையும், சர்க்கரயையும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் திடீர் பாயசம் ரெடி.
ஃ ப்ரிட்ஜில் வைத்து எடுத்த பாயசத்தை சூடு படுத்தும் போது, பாத்திரத்தை நேரடியாக அடுப்பில் வைக்காமல், வேறொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் இட்டு பாயசத்தை சூடுபண்ணினால் பாயசத்தின் சுவை குறையாமல் இருக்கும்.
ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும்போது, இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவையும் பாலில் கலந்து பாயசத்தில் ஊற்ற, பாயசம் கெட்டியாக இருப்பதுடன், மணமாகவும் இருக்கும்.
பாயசம் செய்ய, பால் குக்கரைப் பயன்படுத்தினால் பொங்காமல், வழியாமல், அடி பிடிக்காமல் சுவையான பாயசம் செய்யலாம்.
பால் பாயசத்துக்கு கொஞ்சம் பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து விழுதை சேர்த்தால் சூப்பர் ருசியாக இருக்கும்.
ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது அதை நெய்யில் சிறிது சிறிதாக வறுத்து எடுத்து, பாலில் வேகவிட்டு செய்தால் நேரமும் மிச்சம். வழக்கமான கொழகொழப்பு இல்லாமல், பாயசம் சூப்பர் வாசனையோடு சுவையாகவும் இருக்கும்.
பாயசம் நீர்த்துவிட்டால், பருப்பு பாயசமோ, ஜவ்வரிசி பாயசமோ எதுவாக இருந்தாலும், அதில் இரண்டு டீஸ்பூன் சோளமாவு கலந்து கிளறி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டால் போதும், கெட்டியாகிவிடும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை துருவி எடுத்து அதனுடன் அரைக் கப் சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வையுங்கள். கொதி வந்ததும் ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, சிறிதளவு பால் சேர்த்து இறக்கினால் சூப்பர் பாயசம் ரெடி.
பால் பாயசத்துக்கு பால் குறைவாக இருக்கிறதா? ஒரு டேபிள் ஸ்பூன் ஹார்லிக்ஸை வெந்நீரில் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்த்துவிடுங்கள். பாயசம் நல்ல சுவையாகவும், நிறமாகவும் இருக்கும்.