

தனியா விதை சூப்
தேவையான பொருட்கள்:
தனியா விதை - 1 டீஸ்பூன்.
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 3 டம்ளர்.
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதில் தனியா விதையை போட்டு ஒரு டம்ளராக சுண்டும் வரை ஆனவுடன் வடிகட்டி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி நறுக்கிய மல்லித்தழை தூவி குடிக்கலாம். ஆரோக்கியமான தனியா சூப் ரெடி.
இது பனிக்காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு நல்ல நிவாரணம் தரும்.
பேபி கார்ன் சூப்
தேவையான பொருட்கள்:
பிஞ்சு சோளம் - 1 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
உப்பு - சிறிது.
செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு பிஞ்சு சோளங்களை போட்டு ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி உப்ப மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ஒருகொதி வந்ததும் இறக்கவும். ஆரோக்கிய கார்ன் சூப் ரெடி.
சருமம் பளபளப்பு பெறும்.
தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
உப்பு - சிறிது
மிளகுத்தூள் - சிறிது.
பிரட் துண்டுகள் - சிறிது.
செய்முறை:
பழுத்த தக்காளியை முழுதாக வேகவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதில் சிறிது நீர் ஊற்றி
இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து அடுப்பில் மீண்டும் வைத்து கொதிக்கவிட்டு இறக்குமா தக்காளி சூப் ரெடி உடலில் சரு வறட்சி, மந்தந்தை போக்கி பசியைத் தூண்டும் சூப் ரெடி.
காய்கறி சூப்
தேவையான பொருட்கள்:
கேரட் - 4.
சிறு துண்டுகள்
பீட்ரூட் துண்டுகள் - 4
பீன்ஸ் - 4
கோஸ் - சிறிது
சௌ சௌ - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - சிறிது
உப்பு - சிறிது
மல்லித் தழை - சிறிது
செய்முறை:
அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குக்கரில் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரை விட்டு எடுத்து மசித்துஅதில் மிளகுத்தூள், உப்பு கொத்தமல்லி தழை சேர்த்து குடிக்கலாம். அருமையான காய்கறிகள் சூப் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம். அனைவருக்கும் ஏற்ற சத்துக்கள் நிறைந்த சூப் இது.