
வெற்றிலை ரசம்
தேவை:
வெற்றிலை - 8
மிளகு சீரக தூள் - 1 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லத்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
செய்முறை:
வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து வடிகட்டவும். புளியை நீர் விட்டு கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வெல்லத்தூள், பெருங்காயத்தூள், மிளகு, சீரகத்தூள், வெற்றிலைச் சாறு கலந்து இறக்கி வைத்து, நெய்யில் கடுகு தாளித்து, கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவினால் சுவையான வெற்றிலை ரசம் தயார்..
தூதுவளை ரசம்
தேவை:
தூதுவளை நறுக்கியது - அரை கப்
மிளகு சீரக தூள் - 1 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லத்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, கடுகு தாளித்து, புலியை கரைத்து சேர்க்கவும். உப்பு, வெல்லத்தூள், மிளகு, சீரகத்தூள் கலக்கவும். இதனுடன் தூதுவளைக் கீரையை சாறு பிழிந்து சேர்க்கவும். கொதித்ததும் கருவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும். எத்தகைய சளியையும் கரைக்க வல்ல தூதுவளை ரசம் தயார்.
அன்னாசிப்பழ ரசம்
தேவை:
வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
அன்னாசி பழச்சாறு -1 கப்
மிளகு சீரக தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
வேகவைத்த துவரம் பருப்பை தேவைக்கேற்ப நீர் விட்டு, சீரக, மிளகுத்தூள் கலந்து கொதித்ததும் இறக்கி வைக்கவும். நெய்யில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். இதனுடன் அன்னாசி பழச்சாறைக் கலந்து, மல்லித்தழை தூவவும். இதுபோல ஆரஞ்சு ரசம், சாத்துக்குடி ரசமும் செய்யலாம்.
கொள்ளு ரசம்
தேவை:
கொள்ளு - அரை கப்
மிளகு சீரக தூள் - 1 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லத்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை, நெய் - தாளிக்க
மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
கொள்ளு தானியத்தை எட்டு மணிநேரம் நீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு, வேறு நீரில் வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து, உப்பு, மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள், வெல்லத்தூள் கலந்து கொதிக்க வைக்கவும். அதில் வெந்த பருப்பைக் கொட்டி கொதித்ததும் இறக்கி, நெய்யில் கடுகு தாளித்து சேர்க்கவும். மல்லித்தழை தூவவும்.