பாய் வீட்டு வெஜ் குஸ்கா செய்யலாம் வாங்க!

Veg Kuska Recipe.
Veg Kuska Recipe.
Published on

முஸ்லிம்கள் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பிரியாணிதான். அவர்கள் செய்யும் பிரியாணியின் சுவையே தனித்துவமாக இருக்கும். பிரியாணி போலவே குஸ்காவும் சூப்பர் சுவையில் செய்வார்கள். இந்தப் பதிவில் பாய் வீட்டில் செய்வது போலவே குஸ்கா எப்படி சுவையாக செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 1 கப்

  • வெங்காயம் - 2

  • தக்காளி - 2

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்

  • மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்

  • கசூரி மீதா - 1/2 டீஸ்பூன்

  • தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

  • புதினா இலை - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

  • நீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக தயிர் சேர்த்து, தண்ணீர் விட்டு லேசாக கொதிக்க விடவும். 

பின்னர், ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கிளறவும். இறுதியாக குறைந்த நெருப்பில் பாத்திரத்தை மூடி, அரிசி வெந்ததும் கொத்தமல்லி மற்றும் புதினா இலை தூவி கிளறினால், சூப்பர் சுவையில் பாய் வீட்டு குஸ்கா தயார். 

இதையும் படியுங்கள்:
50 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்? இந்த 7 விட்டமின்கள் முக்கியம்! 
Veg Kuska Recipe.

குஸ்கா மேலும் சுவையாக இருக்க நீங்கள் விரும்பும் காய்கறிகள் போன்றவற்றை சேர்க்கலாம். நீங்கள் சேர்க்கும் தயிரின் அளவை உங்களது சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக, லெமன் ஜூஸ் லேசாக சேர்த்து கிளறினால் சுவை நன்றாக இருக்கும். 

நீங்கள் நினைப்பது போல பாய் வீட்டு வெஜ் குஸ்கா செய்வது கடினமல்ல. மேற்கண்ட செய்முறையைப் பின்பற்றி நீங்களும் வீட்டில் சுவையான குஸ்காவை தயாரிக்கலாம். குஸ்காவை பரிமாறும்போது ரைத்தா அல்லது சாலட் உடன் பரிமாறினால் சுவை மேலும் நன்றாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com