இன்ஸ்டன்ட் சமையல்: ஆரோக்கியம் நிறைந்த காய்கறி ஸ்டிர் ஃபிரை!

Vegetable stir fry
Vegetable stir fry
Updated on

ஜல்ஃபிரெசி (Jalfrezi) ஸ்டிர் ஃபிரை

தேவையான பொருட்கள்:

1.சமையல் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

2.சீரகம் ½ டீஸ்பூன்

3.பச்சை மிளகாய் 1

4.வெங்காயம் நறுக்கியது 1

5.இஞ்சி ஒரு அங்குல துண்டு நறுக்கியது

6.நறுக்கிய பூண்டுப் பல் 2

7.பொடிசா நறுக்கிய தக்காளி 1 கப்

8.தக்காளி பூரீ (Puree) 1 டேபிள் ஸ்பூன்

9.சிவப்பு மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்

10.தனியா தூள் 1 டீஸ்பூன்

11.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்

12.சீரகத் தூள் ½ டீஸ்பூன்

13.நறுக்கிய கேரட், கேப்ஸிகம், பீன்ஸ் மற்றும்

பச்சைப் பட்டாணி கலவை 1 கப்

14.கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்

15.உப்பு தேவையான அளவு

16.பச்சை கொத்தமல்லி இலைகள் 20

செய்முறை:

அடுப்பில் ஒரு வாயகன்ற கடாயை வைத்து சூடாக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகத்தைப் போடவும். சீரகம் வெடித்ததும் பச்சை மிளகாயை கிள்ளிப்போட்டு வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காய துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் தக்காளி பூரீயையும் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவிடவும்.

பிறகு அதில் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அதனுடன் காய்கறி கலவையை சேர்த்து அவை மிருதுவாகும்வரை மீடியம் தீயில் வைத்து, அவ்வப்போது கிளறிவிட்டு வேகவிடவும். தேவைப்பட்டால் ஒரு கை தண்ணீர் தெளித்துக்கொள்ளவும். பின் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்துவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
பலாப்பழத்தில் ஒரு சட்னியா? இனிப்பு, புளிப்பு, காரம் நிறைந்த புதுமையான சுவை!
Vegetable stir fry

ட்ரை ரோஸ்ட் சாம்பார் வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்:

1. துருவிய தேங்காய் ¼ கப்

2.உரித்த சின்ன வெங்காயம் 15

3.உரித்த பூண்டுப் பல் 5

4.சாம்பார் பொடி 1½ டீஸ்பூன்

5.நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்

6.கடுகு ¾ டீஸ்பூன்

7.உளுத்தம் பருப்பு ½ டீஸ்பூன்

8.கறிவேப்பிலை 2 இணுக்கு

9.உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் தேங்காய் துருவலைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டிவிடவும். பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டுப் பற்களை சேர்த்து மீடியம் தீயில் வைத்து நன்கு வதங்கும் வரை கலந்துவிடவும். பின் அதன் மீது சாம்பார் பொடி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வைத்துக் கிண்டிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஒரு வாரம் ஆனாலும் தயிர் புளிக்காது... இதோ பாட்டி காலத்து ரகசியம்!
Vegetable stir fry

நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத் தெடுக்கவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டிக் கலந்து விடவும். விரைவில் தயாரிக்கக் கூடிய, ஆரோக்கியம் நிறைந்த ட்ரை ரோஸ்ட் சாம்பார் வெங்காய சட்னி ரெடி.

logo
Kalki Online
kalkionline.com