பலாப்பழத்தில் ஒரு சட்னியா? இனிப்பு, புளிப்பு, காரம் நிறைந்த புதுமையான சுவை!

jackfruit  recipes
healthy jackfruit recipes
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

லாப்பழத் துண்டுகளைக் கொண்டு சட்னி செய்வது கொங்கணி மற்றும் கர்நாடக கலாச்சாரத்தில் மிகவும் பிரபலமானது. ருசியான பலாப்பழ சட்னியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது மிகவும் ருசியாக இருக்கும். healthy (jackfruit recipes) பிஞ்சு பலாக்காயிலும் சட்னி செய்து ருசிக்கலாம்.

பலாப்பழ சட்னி:

பலாச்சுளை 6 

மிளகாய் 4

தேங்காய் துருவல் அரை கப் 

இஞ்சி சிறு துண்டு 

புளி சின்ன நெல்லிக்காய் அளவு

உப்பு தேவையானது

தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை

பலாச்சுளைகளை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி துண்டு, புளி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் லேசாக வறுத்துக் கொண்டு, தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். அதில் நறுக்கிய பலாத் துண்டுகளை சேர்க்கவும். நல்லெண்ணையில் சிறிது கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் சட்னியில் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். மிகவும் ருசியான புளிப்பு, இனிப்பு, காரம் என அனைத்து சுவையும் நிறைந்த பலாப்பழ சட்னி தயார்.

இதனை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, அடை போன்றவற்றிற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பஞ்சாப் போகாமலே பஞ்சாபி தாபா ஃபீல்! வீட்டிலேயே செய்யலாம் 'சோலே பத்வாரா' - சுவை சும்மா அள்ளும்!
jackfruit  recipes

பிஞ்சு பலாக்காய் சட்னி: 

பிஞ்சு பலாக்காய் துண்டுகள் 1 கப்

தேங்காய்த் துருவல் 1/2 கப் 

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்

உப்பு தேவையானது

புளி சிறிய நெல்லிக்காயளவு

மிளகாய்  6

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்

பிஞ்சு பலாக்காயை தோல் சீவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வறுக்கவும். பின்பு தேங்காய்த் துருவல், புளி சேர்த்து வதக்கி எடுக்கவும். சிறிது ஆறியதும் வெந்த பலாக்காயுடன் தேவையான உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

இதையும் படியுங்கள்:
வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளதா? பழங்கள் பற்றிய அதிர்ச்சிகரமான 8 உண்மைகள்!
jackfruit  recipes

தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கடைசியாக வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் சட்னியில் சேர்த்து கலந்து பரிமாற மிகவும் ருசியான பலாக்காய் சட்னி தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி, சுட்ட அப்பளம் தோதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com