தோசை சூப்பராக சுட வேண்டுமா? இதோ 8 டிப்ஸ்!

dosa
dosadosa
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

1.  தோசைக்கு அரிசி உளுந்து ஊற வைக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்தால் மெத்தென்ற தோசை கிடைக்கும்.

2. முறுகலான தோசை வேண்டுமா வெந்தயத்திற்கு பதில் சிறிது துவரம் பருப்பு சேர்த்து அரைத்தால் முறுகலான தோசை கிடைக்கும்.

3. முறுகலான ரவா தோசை வார்க்க சிறிது அரிசி மாவு ரவை சமமாக எடுத்து ஒரு மேஜை கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுத்த மாவு சேர்த்து தோசை வார்த்தால் மொறு மொறு தோசை கிடைக்கும்.

4. மிருதுவான தோசை வேண்டுமா  ஒரு கைப்பிடி சாதத்தை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அடித்து மாவில் சேர்த்து பார்த்தால் மிருதுவாய் தோசை வரும். சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு மாவில் கலந்து வார்த்தாலும்  பட்டு பட்டாய் தோசை வரும்..

5. ரைத்த தோசைக்கு தண்ணீருக்கு பதில் புளித்த மோரை கலந்து வார்த்தால் சுவையாக இருப்பதோடு நல்ல பிரவுன் கலரில் தோசை வரும்.

6. சிறிதளவு உளுத்தம் பருப்பை ஊறவைத்து கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் சுவையே சுவை.

7. கோதுமை மாவை கரைத்து தோசை வார்க்கும் முன் மாவில் சிறிது எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மாவில் கலக்கினால் கோதுமை தோசை அருமையாக இருக்கும்..

8. தோசைக்கு அரைத்த மாவில் 50 கிராம் கொத்துக்கடலையும் 50 கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து தோசை மாவுடன் சேர்த்து தோசை வார்த்தால் முறு முறு என்று இருப்பதோடு சத்தும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான சிறுபருப்பு தோசை - முட்டைகோஸ் குழம்பு செய்யலாம் வாங்க!
dosa
logo
Kalki Online
kalkionline.com