
அவலை நெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். மோரில் தேவையான அளவுக்கு உப்பு மற்றும் வறுத்த அவலைச் சேர்க்கவும். இதில் சீரகம், சிறிது கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, பெருங்காயம் கரைத்து ஊற்றி, கடுகு தாளித்து ஊற்றவும். சுவையான அவல் பச்சடி தயார்.
வாழைக்காய் சிப்ஸ் செய்யும்போது நேரடியாக எண்ணையில் சீவிப்போட்டால், ஒன்றோடோன்று ஒட்டாது.
குழம்பு வைக்க வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கி, அதன்பின் தக்காளியைச் சேர்த்து வதக்கினால் குழம்பின் ருசி அதிகமாகும்.
பாகற்காய் பொரியல் செய்யும்போது, கொஞ்சம் தயிர் ஊற்றி ஊறவிட்டு, சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு குறைந்துவிடும்.
தக்காளி சட்னிக்கு கொஞ்சம் எள்ளையும் வறுத்துக் கலந்துஅரைத்தால் சுவையாக இருக்கும்.
சாதத்தை மிக்ஸியில் அரைத்து, அதனுடன், இரண்டு கைப்பிடி கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, தயிர் சிறிதளவு, தேவையான தண்ணீர் சேர்த்துக்கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்.
கடலைமாவு, சுக்குத்தூள், ஓமம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, மீந்து போன உப்புமாவை, உருண்டைகளாக உருட்டி, பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் பொரித்தால் டேஸ்ட்டான போண்டா ரெடி.
வறுத்த வேர்க்கடலையை தூளாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும்.
தோசை, இட்லி, வடை மற்றும் போண்டா செய்ய, உளுந்தை வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து அரைத்து எடுத்தால் மாவு மிருதுவாக இருப்பதுடன், கூடுதலாகவும் கிடைக்கும்.
பாயசம் நீர்த்துப்போனால் அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு, சிறிது தேனும் கலந்துவிட்டால், சுவையாகவும், திக்காகவும் இருக்கும்.
எந்த ஒரு புதுப் பலகாரத்தையும் முதலில் சிறிதளவு செய்து பார்த்து விட்டு, பக்குவம் தெரிந்துகொண்ட பின் செய்தால் சமையல் பொருட்கள் வீணாகாது.
அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய் சீரகம் இவற்றோடு சிறிது அரிசியை நீரில் ஊறவைத்து, சேர்த்து மிக்ஸியில் அரைத்து விட்டால் அவியல் வெள்ளை வெளேரென்றும், கெட்டியாகவும் இருக்கும்.