
நெல்லிக்காய் அல்வா
தேவை:
பெரிய நெல்லிக்காய் - 200 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
தேன் - 1 டீஸ்பூன்
நெய் - 150 கிராம்
பாதாம், முந்திரி - தலா 10
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
பெரிய நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து ஆறவைக்கவும். பிறகு, கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப் பகுதியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த நெல்லிக்காய் விழுது, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இடையிடையே சிறிதளவு நெய் சேர்க்கவும். 15 நிமிடங்கள் கைவிடாமல் கிளறிய பிறகு, கலவை தளதளவென்று வரும் பக்குவத்தில் தேன் சேர்க்கவும். கலவையை கரண்டியில் எடுத்தால் பிசுபிசுப்புத்தன்மை இல்லாத பக்குவம் வரும் வரை கிளறவும். சிறிதளவு நெய், முந்திரி, இரண்டு சிட்டிகை ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடவும்.சுவையான நெல்லிக்காய் அல்வா ரெடி.
இஞ்சி அல்வா
தேவை:
இஞ்சி – 100 கிராம்
பனை வெல்லம் – 2 கப்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 10
ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
செய்முறை:
இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அந்தச் சாறில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும். வெல்லத்தூளை வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும்.
பின் ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் நெய்விட்டுக் கிளறவும். அடுப்பை 'ஸிம்'மில் வைத்து, தொடர்ந்து கிளறி, அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான, சத்தான இஞ்சி அல்வா ரெடி.
அவல் அல்வா
தேவை:
கெட்டி அவல் – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலக்காய் தூள், முந்திரி – தேவையான அளவு
செய்முறை:
கெட்டி அவலை நெய்யில் வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சர்க்கரைப் பாகு செய்து, சிறிது நெய் விட்டு, அதில் அவல் பொடியைப் போட்டுக் கிளறி, அல்வா பதத்திற்கு வந்ததும், முந்திரி, ஏலக்காய் தூள் தூவி இறக்கவும். சுவையான அவல் அல்வா ரெடி.
கிஸ்மிஸ் அல்வா.
தேவை:
உலர் திராட்சை – 300 கிராம்
சோள மாவு – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
முந்திரி – 10
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
நெய் – 200 கிராம்
பால் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கிஸ்மிஸ் பழத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் ஊறவைத்த பழத்தைச் சுத்தம் செய்து, ஒன்று இரண்டாக அரைத்துக்கொள்ளவும். சோளமாவை நீரில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய்விட்டு முந்திரி, சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதி வந்தவுடன், அரைத்துவைத்துள்ள உலர் திராட்சைப் பழத்தைப் போட்டுக்கிளறவும்.
பின் கெட்டித்தன்மை அடைய, கரைத்து வைத்துள்ள சோள மாவைத் தண்ணீர் சேர்த்துக்கிளறி, நெய் மற்றும் ஏலத்தூள் போட்டு, அல்வா பதம் வந்தபின், இறக்கவும். வித்தியாசமான சுவையில் கிஸ்மிஸ் அல்வா ரெடி.