கோதுமை ரவை வடை செய்வது எப்படி

கோதுமை ரவை வடை செய்வது எப்படி
Updated on

தேவையானவை :

கோதுமை ரவை - 3 கப்

கெட்டித் தயிர் - 3 கப்

பச்சை மிளகாய் - 4

இஞ்சித் துருவல் - 1 ஸ்பூன் 

மல்லித்தழை நறுக்கியது - 2 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

கோதுமை ரவையை வறுத்து தயிரில் சேர்க்கவும். உப்பு,நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், மல்லித்தழை சேர்த்து வடை மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும் சுவையான, செய்வதற்கு எளிதான வடை இது.

logo
Kalki Online
kalkionline.com