டயட்டில் இருப்பவர்களுக்கான சூப்பர் கோதுமை ரெசிபிகள்!

Wheat recipes
Wheat recipes
Published on

Wheat recipes:

கோதுமை உப்புமா

தேவை:

உடைத்த கோதுமை – 1 கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிதளவு

கேரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப் (சிறு துண்டுகளாக)

கருவேப்பிலை – சில

கடுகு – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 2 டீஸ்பூன் (அதிகமாக வேண்டாம்)

தண்ணீர் – 2 ½ கப்

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் வதக்கவும். காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உடைத்த கோதுமை சேர்த்து சீராக கிளறி, மூடி வேகவிடவும். சிறிது நேரத்தில் சுவையான கோதுமை உப்புமா தயார்.

கோதுமை புட்டு

தேவை;

கோதுமை - 1 கப்

உப்பு - சிறிது

தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்

செய்முறை:

கோதுமையை வறுத்து மாவாக அரைக்கவும். அதில் உப்பு சேர்த்த நீரை தெளித்து, பிசிறி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அந்த மாவை இட்லி தட்டுகளில் நிரப்பி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு அதில் தேங்காய்த் துருவலை போட்டுக்கிளறி விட்டால் சுவையான, சத்தான கோதுமை புட்டு தயார்.

இதையும் படியுங்கள்:
கசப்பே தெரியாத வெந்தயக்கீரை ரெசிபி: மேத்தி பரோட்டா & சப்ஜி!
Wheat recipes

கோதுமை பாயாசம்

தேவை:

1 டம்ளர் உடைத்த கோதுமை

3 டம்ளர் பால்

2 டம்ளர் தண்ணீர்

2 டம்ளர் வெல்லம்

2 டம்ளர் திக்கான தேங்காய் பால்

1 ஸ்பூன் ஏலத்தூள்

1/2 ஸ்பூன் சுக்குத் தூள்

1/4 ஸ்பூன் ஜாதிக்காய் பொடி

1 சிட்டிகை உப்பு

3 டேபிள் ஸ்பூன் நெய்

1/2 கப் தேங்காய் துண்டுகள்

25 முந்திரி

சமையல் குறிப்புகள்:

குக்கரில் நெய் விட்டு சூடானதும் உடைத்த கோதுமையை சேர்த்து நன்கு வதக்கவும் பின் பால் மற்றும் தண்ணீர் கலந்து ஊற்றவும் குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்

ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை கலந்து கொள்ளவும். பின் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

பின் நெய் விட்டு சூடானதும் முந்திரி தேங்காய் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொட்டவும் பின் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

பின் ஏலத்தூள் சுக்குத்தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்

சுவையான ஆரோக்கியமான மணமான கோதுமை பாயாசம் ரெடி.

கோதுமை வடை

தேவை:

முருங்கைக்கீரை இலை - அரை கப்

கோதுமை - ஒரு கப்

தண்ணீர் - முக்கால் கப்

சின்ன வெங்காயம் - 6

பச்சை மிளகாய் - ஒன்று

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவ.

இதையும் படியுங்கள்:
வாயில் போட்டால் கரைந்துவிடும்! ஹோட்டல் சுவையையே மிஞ்சும் பன்னீர் கோஃப்தா!
Wheat recipes

செய்முறை:

கோதுமையை நான்கு மணி நேரம் ஊறவைத்து, நன்கு அரைத்துக்கொள்ளவும். கீரையைக் கழுவி ஒரு சுத்தமான துணியில் உலர்த்தவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக, மற்ற பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியான மாவு போல் கலந்துகொள்ளவும். இதனுடன் கோதுமை விழுதை சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். சுவையான கோதுமை வடை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com