வியக்க வைக்கும் சுவையில் ஒயிட் பீன்ஸ் பிரியாணி செய்யலாமா?

ஒயிட் பீன்ஸ் பிரியாணி ...
ஒயிட் பீன்ஸ் பிரியாணி ...www.youtube.com
Published on

வெள்ளை மொச்சை எனப்படும் ஒயிட் பீன்ஸ் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டு உள்ளோம். வெண்ணெய் போல் மிருதுவான ஒயிட் பீன்ஸ் பார்த்தாலே கவர்ந்து இழுக்கும். அதில் இருக்கும் சத்துக்கள் உடல் நலத்துக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும் என்பதால் நம் சமையலில் இதை வாரம் இரண்டு முறையாவது சேர்ப்பது நல்லது என்கின்றனர். இதில் ஒரே மாதிரி குருமா, சுண்டல் என செய்து கொடுப்பதை விட இது போன்ற பிரியாணி வகையாக செய்து தந்தால் இன்னும் ருசியாக சாப்பிடத் தோன்றும். இதோ உங்களுக்காக ஒயிட் பீன்ஸ் பிரியாணி செய்முறை.

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - ஒரு ஆழாக்கு
வெள்ளை மொச்சை அதாவது ஒயிட் பீன்ஸ் - 150 கிராம் 
நெய் - 2 டே. ஸ்பூன்
எண்ணெய்- 1 ஸ்பூன்
உரித்த சின்ன வெங்காயம் - 8
தக்காளி- 2
பச்சை மிளகாய்- 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்- சிறிது
சீரகம் சோம்பு - தலா கால் டீஸ்பூன் லவங்கம் - 4
ஏலக்காய்- 4
பட்டை - சிறிய துண்டு
அன்னாசி பூ  மராட்டி மொக்கு - தலா ஒன்று
பிரிஞ்சி இலை -1
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
தயிர்- 100 மில்லி
கொத்தமல்லித் தழை- சிறிது
உப்பு -தேவையான அளவு.
  
செய்முறை:
பிரியாணி அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். வெள்ளை மொச்சையை முதல் நாளே ஊறவைத்து வடித்து முளைவிட்டு எடுக்கவும். பிரியாணி அரிசியை சிறிது நெய்யில் லேசாக வறுத்து முக்கால் பதம் வேகவைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டவும். முளைவிட்ட பீன்ஸை அதிகம் நசுங்காதவாறு விசில் விட்டு வேகவைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஓநாய் வகை ஆளுமைத்தன்மை பற்றி தெரியுமா?
ஒயிட் பீன்ஸ் பிரியாணி ...

இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், ஏலக்காய், லவங்கம், பட்டை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய்யும் எண்ணெயும் விட்டுக் காய்ந்து கடுகு பொரிந்ததும் மராட்டி மொக்கு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை போட்டு நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி  அரைத்த மசாலா சேர்த்து வாசம் வரும்வரை  நன்கு வதக்கி தேவையான உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும்.  

இந்தக் கலவையுடன் எடுத்து வைத்த வெந்த மொச்சை சேர்த்து வடித்த பிரியாணி அரிசி சாதத்தில் கலந்து நன்கு   கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி மேலே சிறிதளவு நெய் ஊற்றி கொத்தமல்லி தழையை சேர்த்து தயிர் பச்சடியுடன் பரிமாறினால் சூப்பரான  ஒயிட் பீன்ஸ் பிரியாணி ரெடி. இதற்கு தக்காளி சாஸும்  தொட்டுக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com