ஆந்திரா ஸ்பெஷல் பச்சி புலுசு ரசம் - இஞ்சிப் பச்சடி செய்யலாமா?

Andhra special pachi pulusu rasam-ginger pachadi
Andhra special pachi pulusu rasam-ginger pachadi
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பச்சி புலுசு ரசம் மற்றும் இஞ்சிப் பச்சடி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்பாடி செய்யறதுன்னு பார்ப்போம்.

பச்சி புலுசு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

மிளகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்-6

பூண்டு-5

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு

கொத்தமல்லி-சிறிதளவு

புளி-எழுமிச்சை அளவு

பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி

உப்பு-தேவையான அளவு

பச்சி புலுசு ரசம் செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை சேர்த்து தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். புளி ஊறியதும் அதை பிழிந்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 இப்போது மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 6, பூண்டு 5, பச்சை மிளகாய் 2 ஆகியவற்றை நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மேற்படி தட்டி, நசுக்கி வைத்திருக்கும் கலவையை சேர்த்துவிட்டு கரைத்து வைத்த புளியை சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு ரசத்தில் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டால் பச்சி புலுசு அதாவது பச்சை புளி ரசம் தயார்.

இஞ்சிப் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

இஞ்சி-4 துண்டுகள்

துருவிய தேங்காய்-1 கப்

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்-2

உப்பு-1 தேக்கரண்டி

வெல்லம்-சிறிதளவு

புளி-நெல்லிக்காய் அளவு

எண்ணெய்-தேவையான அளவு

கடுகு-1தேக்கரண்டி

இஞ்சிப் பச்சடி செய்முறை விளக்கம்.

முதலில் புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது துருவிய தேங்காய் 1கப்,  இஞ்சி 4 துண்டு, பச்சை மிளகாய் 2, உப்பு தேவையான அளவு, வெல்லம் சிறிதளவு, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி சேர்த்து பொரிந்து வந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுது, புளிக்கரைச்சலை சேர்த்துவிட்டு, உப்பு தேவையான அளவு,  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இந்த பச்சடியை இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவை அல்டிமேட்டாக இருக்கும். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
நாவூர வைக்கும் சுவையில் முட்டை பொடிமாஸ் - பேபி பொட்டெட்டோ மஞ்சூரியன் செய்யலாமா?
Andhra special pachi pulusu rasam-ginger pachadi
logo
Kalki Online
kalkionline.com