நாவூர வைக்கும் சுவையில் முட்டை பொடிமாஸ் - பேபி பொட்டெட்டோ மஞ்சூரியன் செய்யலாமா?

Egg Podimas-Baby Potato Manchurian
Egg Podimas-Baby Potato Manchurian
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான முட்டை பொடிமாஸ் மற்றும் பேபி பொட்டெட்டோ மஞ்சூரியன் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

முட்டை பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்-10

பூண்டு-10

புளி-1 துண்டு

மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி

சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி

சோம்பு தூள்-1/2 தேக்கரண்டி

கரம் மசாலா-1/2 தேக்கரண்டி

முட்டை-6

எண்ணெய்-தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு

கடுகு-1 தேக்கரண்டி

வரமிளகாய்-4

கருவேப்பிலை-சிறிதளவு

முட்டை பொடிமாஸ் செய்முறை விளக்கம்.

முதலில் மிக்ஸியில் 10 சின்ன வெங்காயம், 10 பூண்டு, சின்ன துண்டு புளி, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் ½ தேக்கரண்டி, சோம்பு தூள் ½ தேக்கரண்டி, கரம் மசாலா ½ தேக்கரண்டி சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 6 முட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து அரைத்த பேஸ்ட்டை இத்துடன் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு  இரண்டு நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக்கொள்ளவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி தூள் உப்பை சேர்த்துவிட்டு செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் சுவையான முட்டை பொடிமாஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பேபி பொட்டெட்டோ மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்.

பேபி பொட்டெட்டோ-20

உப்பு-தேவையான அளவு

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி

மைதா மாவு-1 தேக்கரண்டி

சோளமாவு-1 தேக்கரண்டி

எண்ணெய்-தேவையான அளவு

இஞ்சி-1 துண்டு

பூண்டு-4

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-2

சர்க்கரை-1 தேக்கரண்டி

சில்லி பேஸ்ட்-1 தேக்கரண்டி

சோயா சாஸ்-1 தேக்கரண்டி

தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி

கொத்தமல்லி-சிறிதளவு

பேபி பொட்டெட்டோ மஞ்சூரியன் செய்முறை விளக்கம்.

முதலில் பேபி பொட்டெட்டோ 20 வேக வைத்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, மைதா 1 தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது பேனில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு சிறிதாக நறுக்கிய பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1 ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, சர்க்கரை 1 தேக்கரண்டி, சில்லி பேஸ்ட் 1 தேக்கரண்டி, சோயா சாஸ் 1 தேக்கரண்டி, தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்துவிடவும்.

இப்போது சோளமாவு 1 தேக்கரண்டியை கரைத்து அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக வறுத்து வைத்திருக்கும் பேபி பொட்டேட்டோவை சேர்த்து கொத்தல்லி தூவி இறக்கினால் சுவையான பேபி பொட்டெட்டோ மஞ்சூரியன் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு இதமாய் பூசணிக்காய் மோர்க்குழம்பு - மக்கானா ப்ரூட் கஸ்டர்ட் ரெசிபிஸ்!
Egg Podimas-Baby Potato Manchurian
logo
Kalki Online
kalkionline.com